முந்தய பக்கம்

வாலிபர் சங்க ரத்ததான முகாம்

20 Feb 2026, 2:39 pm
வாலிபர் சங்க ரத்ததான முகாம்
<p><strong>வாலிபர் சங்க ரத்ததான முகாம்</strong></p> <p>கள்ளக்குறிச்சி, பிப். 20- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கப்பற்படை எழுச்சி தினத்தை முன்னிட்டு, சங்கராபுரம் ஒன்றியக் குழு சார்பில் ரத்ததான முகாம் (பிப். 18) புதன்கிழமை நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் முனு. சரத்குமார் தலைமை தாங்கினார். சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் ஒன்றியச் செயலாளர் ஆறு. பகத்சிங் வரவேற்றுப் பேசினார். முகாமில் திமுக சங்கராபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் ரோஜாரமணி தாகப்பிள்ளை, வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆறு. கதிரவன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் மு. இதாயதுல்லா, மருத்துவர்கள் ராஜ்மோகன், கார்த்திக், விஜயகுமார், வழக்கறிஞர்கள் திருநாவுக்கரசு, ரீஃபாத், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் இ. சதீஷ்குமார், மாவட்டச் செயலாளர் மு. சிவக்குமார், ரத்த தான கழக கன்வீனர் ஏ. விஷ்ணுகுமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே. ஏழுமலை, ஒன்றியச் செயலாளர் செ. சிவாஜி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. பிரகாஷ்காரத், மாவட்டத் துணைச் செயலாளர் எஸ். சஞ்சய், ஒன்றிய நிர்வாகிகள் தமிழ்மாறன், சதீஷ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram