வாலிபர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
19 Dec 2025, 6:05 pm

வாலிபர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சி.எம். பிரகாஷ், மாவட்ட தலைவர் பி. தமிழ்ச்செல்வன்,பொருளாளர் திலகராஜ், விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சரவணன், சிறுபான்மையினர் நலக்குழு மாவட்ட நிர்வாகிகள் அப்துல்காதர்,யாசர் அராபத் மாணவர் சங்க மாவட்ட செயலாளர் வி.கோபிநாத்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எழில்வாணன், சபாபதி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுகுமார், மோனிஷ்,ராமதாஸ்,ராமு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் உத்தனப்பள்ளியில் வட்ட செயலாளர் மிதுன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. வட்டத் தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.மாவட்டச் செயலாளர் இளவரசன் தலைவர் நஞ்சாரெட்டி கோரிக்கைகளை விளக்கி பேசினர். முன்னதாக காவல்துறை காத்திருப்பு போராட்டத்திற்கு அனுமதி மறுத்து தடுத்தனர்.ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு தாமதமாக காத்திருப்பு போராட்டம் துவங்கியது.வாலிபர் சங்க நிர்வாகிகள் திலக்,கிருஷ்ணமூர்த்தி, மாரிமுத்து,சுசீலா,காவியா,கலந்து கொண்டனர். சிபிஎம் மாவட்ட செயலாளர் சி.சுரேஷ்,விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் முருகேஷ், வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட பொருளாளர் முருகன் வாழ்த்தி பேசினர்.