முந்தய பக்கம்

அருமனையில் வாலிபர் சங்கத்தின் மக்கள் ஒற்றுமை பேரணி பொதுக்கூட்டம்

16 Mar 2026, 4:46 pm
அருமனையில் வாலிபர் சங்கத்தின் மக்கள் ஒற்றுமை பேரணி பொதுக்கூட்டம்
<p><strong>அருமனையில் வாலிபர் சங்கத்தின் மக்கள் ஒற்றுமை பேரணி பொதுக்கூட்டம்</strong></p> <p>அருமனை, மார்ச். 16- கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மக்கள் ஒற்றுமை பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. &nbsp;1989 ஆம் ஆண்டு அருமனையில் காவல் நிலைய முன்பாக மத வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கலியன் அருகே அரக நாடு பகுதியை சேர்ந்த அறநாடு பாடி பசங்க கிளைச் செயலாளர் சுதாகரனின் 37 வது நினைவு தினம் மார்ச் 12 ம் தேதி மாவட்ட முழுவதும் கடைபிடிக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் அருமனையில் மக்கள் ஒற்றுமை விழாவாக நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு மார்ச் 15 ம் தேதி முழுக்கோடு சந்திப்பிலிருந்து வாலிபர் சங்கத்தினரின் &nbsp;பேரணி &nbsp;அருமனை நெடுங்குளம் சந்திப்பு வரை நடைபெற்றது. பேரணியில் ஏராளமான வாலிபர்கள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்திற்கு அருமனை வட்டாரத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். வாலிபர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் &nbsp;சுபிக்ஷா வரவேற்றுப் பேசினார். &nbsp;மாநில செயலாளர் கார்த்திக், மாவட்டச் செயலாளர் விஷ்ணு, மாவட்ட தலைவர் ரெதீஷ், &nbsp;செயற்குழு உறுப்பினர் கள் ரெஜின், ஜினோ, காவ்யா, &nbsp;தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாநில நிர்வாகிகள் வேலாயுதம், லட்சுமிகாந்தன் ஆகியோர் உரையாற்றினர்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram