வாலிபர் சங்கத்தின் மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா
16 Jan 2026, 3:00 pm
<p><strong>வாலிபர் சங்கத்தின் மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா</strong></p>
<p>திருப்பூர், ஜன.16- தமிழர் திருநாளான பொங்கல் விழாவை, மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் சமத்துவ பொங்கல் விழாவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடினர். சாதி மற்றும் மதங்களின் பெயரால் மக் களை பிரித்து அரசியல் நடத்தும் மதவாதிக ளுக்கு மத்தியில், மக்கள் ஒற்றுமையை காக் கும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வியாழன் மற்றும் வெள்ளியன்று திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சமுத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சமத்துவ பொங்கல் வைத்து, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி வெற்றி பெற் றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். அதன்படி திருப்பூரில் பெருமாநல்லூர், கருவம்பாளை யம், பூச்சக்காடு, இடுவாய், முருகம்பாளை யம், பிடிஆர் நகர், காளிவேலம்பட்டி, பாப்பம் பாளையம், காங்கேயம், சோமனூத்து, பி. ஆண்டிபாளையம், கரட்டுப்புதூர், தென்னம் பாளையம் காலனி, சிட்கோ, மாணிக்காபு ரம் ஆகிய பகுதிகளில் வியாழனன்று நடை பெற்றது. மிஷின் வீதி, பாரதிபுரம், அவிநாசி வடக்கு, வடுகபாளையம், சிவநாதபுரம் ஆகிய பகுதிகளில் வெள்ளியன்று நடைபெற் றது. உடுமலை: உடுமலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மக்கள் ஒற்றுமை பொங் கல் விளையாட்டு விழா வியாழனன்று உரல் பட்டி, பள்ளபாளையம், குரல்குட்டை, ஜல் லிபட்டி மற்றும் சிவசக்திகாலனி ஆகிய பகுதி யில் நடைபெற்றது. இந்த விழாவில் அனைத்து மக்களும் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து போதை கலாச்சாரத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்து கொண்டனர். மேலும், மூடநம்பிக்கையால் மக்கள் படும் துன்பங்களுக்கு அவர்களின் அறியாமை தான் காரணம் என்பதை விளக்கும் மந்திரமா தந்திரமா விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருக்குறள் ஒப்புவித்தல், கதை சொல்ல வாங்க என்பது உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மற்றும் கும்மி பாட்டு நடைபெற்றது. இந்நிகழ்வுகளில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச்செயலாளர் சி.மூர்த்தி, வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வராஜ், மாநிலக்குழு உறுப்பினர் சுதா, மாவட்டத் தலைவர் க.நிருபன் சக்கரவர்த்தி, மாவட்டச் செயலாளர் கு.பாலமுரளி, பொருளாளர் க.சிந்தன், விளையாட்டு குழு கன்வீனர் சந் தோஷ், நிர்வாகி விவேக், கமிட்டி தலை வர்கள், ரேவந்த், செல்லமுத்து, சந்தோஷ் குமார், முருகேஷ், ராமசாமி, செயலளர்கள் பிரவீன், மெளனிஷ், விக்னேஷ், வடிவேல், மாசாணி, பொருளாளர் கல்கி, நரேந்திர பிரசாத், நாகராஜ், கருப்புசாமி, கோபால், ரமேஷ், தங்கராஜ், தினகரன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்ற னர்.</p>
