தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

23 Jan 2026, 5:49 pm
சென்னை விரைவு செய்திகள்

பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை முயற்சி: இளைஞர் கைது

ஆவடி, ஜன.23- ஆவடி அருகே திருநின்றவூரைச் சேர்ந்த மங்கையற்கரசி (36) என்பவர் கணவரைப் பிரிந்து, விருதுநகரைச் சேர்ந்த தங்கமாரியப்பன் (38) என்பவருடன் கடந்த 3 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வந்தார். மங்கையற்கரசி சக நண்பர்களுடன் அலைபேசியில் பேசுவதைக் கண்டித்து தங்கமாரியப்பன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று மதுபோதையில் வந்த தங்கமாரியப்பன், இது தொடர்பாகத் தகராறு செய்து மங்கையற்கரசியின் கழுத்தை கத்தியால் அறுத்தார். தடுக்க முயன்ற தாய் மீனாட்சியின் இரு கைகளிலும் குத்தினார். படுகாயமடைந்த இருவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கமாரியப்பனை கைது செய்தனர்.

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில்  இன்று கனமழை வாய்ப்பு!

சென்னை, ஜன.23- தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் சனிக்கிழமையன்று (ஜன.24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிழக்கு திசையில் இருந்து மேற்கு நோக்கி நகரும் வளிமண்டல அலை (Easterly waves) நிகழ்வு தற்போது நிலவு கிறது. மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சனிக்கிழமை (ஜன.24) கடலோர தமிழ கத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் சனிக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 25-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 26-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களிலும் ஓரிரு இடங்களிலும், 27 முதல் 29-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சனிக்கிழமை மற்றும் 25 தேதிகளில் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளை குடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அந்த மையத்தின்  செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இன்ஸ்டா மோகத்தில் வீலிங் செய்யும் இளைஞர்கள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

அம்பத்தூர், ஜன. 23- அம்பத்தூர் - செங்குன்றம் நெடுஞ்சாலை யில் சில இளைஞர்கள்  விலையுயர்ந்த இரு சக்கர வாகனத்தில் சக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதமாக அதிவேகமாக ரேஸ் ஓட்டி, முன்பக்க சக்கரத்தை தூக்கி வீலீங் செய்துள்ளனர். மேலும் அதனை வீடியோ எடுத்து, தங்களது இன்ஸ்டா பக்கத்தில் வெள்ளிக்கிழமை அதனை பதிவு செய்துள்ளனர். அம்பத்தூர் - செங்குன்றம் பிரதானச் சாலைகளில், அதிவேகமாக வாகனங்களை ஓட்டி செல்வதும், விபரிதமான சாகசங்களை செய்து, சக வாகன ஓட்டிகளை அச்சுறுத்துவதும் அதிகரித்துள்ளது.

‘நியோமேக்ஸ்’ மோசடி: ரூ.2,000 கோடி சொத்துகளை ஏலம் விட உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஜன.23- நியோமேக்ஸ் மோசடி வழக்கில், முதலில் கட்டிடங்கள், வணிக வளா கங்கள் உள்ளிட்ட ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை பொது ஏலம் விடு வதற்கு உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ரியல் எஸ்டேட் நிதி நிறு வனங்கள் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நியோ மேக்ஸ், ஹெல்பின், எம்.ஆர்டிடி உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாகவும் முதலீடு முதிர்வு காலத்தில் பல மடங்கு அதிக மாக திருப்பித் தரப்படும் என பொது மக்களிடம் ஆசை வார்த்தை கூறி பல கோடி மோசடியில் ஈடுபட்டன. இவ்வழக்கை மதுரை பொரு ளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். மோசடியில் ஈடுபட்ட இயக்குநர்கள் கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ளனர். அவர்களின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என, பலரும் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, “நியோமேக்ஸ் நிறு வனத்தினரின் நிலம் கையகப்படுத்தப் பபட்டு உள்ளது. கையகப்படுத்திய நியோமேக்ஸ் சொத்துகளை விரை வாக பிரித்து கொடுக்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில், மாவட்ட வருவாய் அலுவலர், பதிவுத்துறை அதிகாரி உள்ளிட்டோர் இருந்தனர். இக்குழு நியோமேக்ஸ் நிறுவன சொத்துக்களை , கையகப்படுத்தி யது. அதை நிலங்கள், ஓட்டல், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டு மானங்கள் என, நான்கு வகையாக வகைப்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் மொத்தம் 60 ஆயிரம் புகார் தாரர்கள் உள்ளனர். தற்போது ரூ.6000 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. அதில், முதலில் கட்டி டங்கள் , வணிக வளாகங்கள் உள்ளிட்ட ரூ. 2 ஆயிரம் கோடி சொத்துக்களை பொது ஏலம் விடவேண்டு மென உத்தரவிட்டு வழக்கு விசா ரணையை ஒத்திவைத்து உத்தர விட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.