தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட மேலாளரை கண்டித்து வாலிபர், மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

5 Mar 2026, 3:59 pm
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட  மேலாளரை கண்டித்து வாலிபர், மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
<p><strong>தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட &nbsp;மேலாளரை கண்டித்து வாலிபர், மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>திருவாரூர், மார்ச் 5- &nbsp;தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருவாரூர் கிளை உட்பட விபத்துகளை தடுக்க பரிகார பூஜை செய்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி, வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கத்தின் மாவட்டக் குழு சார்பாக, போக்குவரத்து கழகத்தின் திருவாரூர் கிளை மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பா. ஆனந்த், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பா. விக்னேஷ் ஆகியோர் தலைமை ஏற்றனர், வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.எம். பாலா, மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பா.லெ. சுகதேவ் ஆகியோர் கோரிக்கையை விளக்கி உரையாற்றினர். &nbsp;ஆர்ப்பாட்டத்தில் மாவட்டப் பெருளாளர் வி. தீனதயாளன், மாவட்ட துணைத் தலைவர்கள் வீ. சந்தோஷ், பி. விஜய் திருவாரூர் ஒன்றியச் செயலாளர் க. இளையராஜா உள்ளிட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர். விபத்துகளை தடுப்பதற்கு பேருந்துகள் பராமரிப்பு, தேவையான உதிரி பாகங்கள், ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப உதவியாளர்கள், நிர்வாக பணியாளர்களை வேலைக்கு அமர்த்துதல் போன்ற நடைமுறைகளை பின்பற்றாமல் மாற்றாக பரிகார பூஜை செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனைகளுக்கு உத்தரவிட்ட கும்பகோணம் கோட்ட மேலாளரை கண்டித்தும், பரிகாரபூஜையில் ஈடுபட்ட நாகப்பட்டினம் மண்டல அலுவலகம் வேளாங்கண்ணி தலைமை பணிமனைகளின் மேலாளர் மற்றும் நிர்வாகத்தினர் மீது, போக்குவரத்துதுறை கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.