பாலக்கோடு: இளைஞர்கள் ஆணவக்கொலை?
27 Nov 2025, 3:11 pm
<p>தருமபுரி, நவ.27- பாலக்கோடு அருகே 2 இளைஞர்கள் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த நிலையில், இருவரும் ஆண வப்படுகொலை செய்யப்பட்டதாகக்கூறி உறவினர்கள் காவல் நிலையத்தில் முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், சொன்னம்பட் டியை சேர்ந்த நந்தகுமார் என்பவரின் மகன் சுனில்குமார் (19). இவர் கெலமங்கலம் தனி யார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவ ரின் இவரது மகன் முருகன் (20). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், புத னன்று இரவு சுனில்குமார் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் முருகனுடன் பாலக் கோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். சின்னார்தஅள்ளி கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர். இந்நிலையில், சொன்னம்பட்டியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இருவரது உயிரிழப்பில் சந்தேகம் உள்ள தாகக்கூறி பாலக்கோடு காவல் நிலை யத்தை முற்றுகையிட்டனர். இரண்டு இளை ஞர்களும் மாற்று சமூகத்தை சேர்ந்த பெண் களை காதலித்து வந்த நிலையில், பெண் வீட்டார்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் னர் இளைஞர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால், திட்டமிட்டு இளைஞர்களை கொலை செய்து உள்ள தாகவும், குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவலறிந்த துணை காவல் கண்காணிப்பாளர் ராஜசுந்தர் பேச்சு வார்த்தை மேற்கொண்டு வருகிறார். இச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.</p>
