அழுகிய நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு
25 Jun 2026, 1:10 am
<p><strong>அழுகிய நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு</strong></p><p>கோவை, ஜூன் 24- கோவை மேற்கு புறவழிச்சாலை காட் டுப்பகுதியில் அழுகிய நிலையில் இளம் பெண் சடலம் ஆடைகளின்றி மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கோவை மேற்கு புறவழிச்சாலை, சுகு ணாபுரத்தை அடுத்த மஞ்சப்பள்ளம் காட்டுப் பகுதியில் ஆடைகளின்றி பெண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல் துறையி னருக்கு புதனன்று தகவல் அளித்தனர். அதன் பேரில் அங்கு வந்த குனியமுத்தூர் காவல் துறையினர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோத னைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத் தில் தடயங்களை சேகரித்த தடயவியல் துறை அதிகாரிகள், மோப்ப நாய் உதவியுடன் அப் பகுதி முழுவதும் போலீசார் சோதனையிட்ட னர். மேலும், பாலக்காடு சாலை மற்றும் மேற்கு புறவழிச்சாலை சுற்றுவட்டார பகுதி களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரிக்கும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட விசார ணையில், சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ணாக இருக்கலாம் என்றும், அவர் உயிரி ழந்து சுமார் 3 முதல் 4 நாட்கள் இருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது. முகம் சிதைந்த நிலையில் இருப்பதால், அவரை அடையா ளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, இருப்பினும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பதி வான பெண் மாயமான புகார்கள் தொடர்பான தகவல்களையும் போலீசார் திரட்டி வருகின்ற னர். மேலும் தனிப்படை அமைத்து போலீ சார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த மே 21 ஆம் தேதி சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொ டுமை செய்யப்பட்டதோடு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல மது போதை தகராறிலும் இளைஞர், தொழிலாளி என கொலை சம்பவங்களும் அரங்கேறி யது. சிறுமி கொலையை தொடர்ந்து மாவட் டம் முழுவதும் புறநகர் பகுதிகளில் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தப்படும் என போலீ சார் தெரிவித்திருந்தனர். ஆனால், தற்போது இளம்பெண் ஆடைகளின்றி சடலமாக மீட்கப் பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
