முந்தய பக்கம்

வெற்றிக்கனி பறிப்பாய்! - சண்முக சிதம்பரம்

22 Nov 2025, 2:30 pm
வெற்றிக்கனி பறிப்பாய்!  - சண்முக சிதம்பரம்
<p><strong>வெற்றிக்கனி பறிப்பாய்!&nbsp;</strong></p> <p>சிந்தனைச் சிறகை விரிப்பாய் - நற் &nbsp;செயலினைச் செய்து முடிப்பாய்! செந்தமிழ் மொழியைக் காப்பாய்- தொன்மைச் &nbsp;சிறப்பினை அறிந்து படிப்பாய்! &nbsp;உரிமை கேட்டுப் பெறுவாய் - மன &nbsp;உறுதி கொண்டே திகழ்வாய்! திரியென ஒளியைத் தருவாய் - கூடாத் &nbsp;தீங்கினை விலக்கிக் கொள்வாய்! &nbsp;பரிதியைப் போல எழுவாய் - நல்ல &nbsp;பண்புடன் நடக்கக் கற்பாய்! பிரிவினைப் பேசா திருப்பாய் - சாதி &nbsp;பேதங்கள் பார்க்காதிருப்பாய்! &nbsp;உயர்ந்தவர் தாழ்ந்தோர் பாராய் - நீ &nbsp;உள்ளத்தை மாற்று நேராய்! முயன்றிட வேண்டும் கூராய் - நல்ல &nbsp;முடிவினை எடுப்பாய் சீராய் ! &nbsp;செடிகளை நட்டு வளர்ப்பாய் - நற் &nbsp;சேவைகள் செய்துவளர்வாய்! விடியலில் எழுந்தே உழைப்பாய் - பெறும் &nbsp;வெற்றிக் கனியைப் பறிப்பாய்!</p>
Share
FacebookXWhatsAppTelegram