தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மனுவாத ஆர்எஸ்எஸ் பாஜக கூட்டணியை முறியடிப்பீர்! இடதுசாரி வேட்பாளர்கள் - மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை வெற்றி பெறச் செய்வீர்!

22 Mar 2026, 3:06 pm
மனுவாத ஆர்எஸ்எஸ் பாஜக கூட்டணியை முறியடிப்பீர்! இடதுசாரி வேட்பாளர்கள் - மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை வெற்றி பெறச் செய்வீர்!

மனுவாத ஆர்எஸ்எஸ் பாஜக கூட்டணியை முறியடிப்பீர்! இடதுசாரி வேட்பாளர்கள் - மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை வெற்றி பெறச் செய்வீர்!

சென்னை, மார்ச் 22 - எதிர்வரும் சட்ட மன்றத் தேர்தலில்  தமிழக வாக்காளர்கள் இந்துத்துவ மனுவாத ஆர்எஸ்எஸ் - பாஜகவையும் அதனோடு கூட்டணி வைத்துப் போட்டி யிடும் கட்சிகளையும் ஒவ்வொரு தொகுதி யிலும் டெபாசிட் தொகை இழக்கும் அளவு தோற்கடிக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி களில் பெருவெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இடதுசாரிகள், மதச் சார்பற்ற  ஜனநாயக சக்திகள் அதிக அளவில் வெற்றி பெற்று தமிழகத்தில் நல்லிணக்க த்தைத் தொடர்ந்து நிலை பெறச் செய்ய வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத். மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் எழும்பூரில் நடைபெற்ற உரிமை முழக்க சிறப்பு பொதுக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய அவர், மாநிலக் குழு பணித்த தேர்தல் நிதி இலக்கை நிறை வேற்றிய மத்திய சென்னை மாவட்டக் குழுவுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.  அவரது உரையின் பகுதிகள் வருமாறு: யாரிடமிருந்து பெறுகிறோம் நிதியை? மற்ற கட்சிகளுக்கும் கம்யூனிஸ்ட்  கட்சிக்கும் நிதியைப் பெறும் விதத்தி லேயே வேறுபாடு உண்டு.

பல்லாயிரம் கோடி நிதியை கார்ப்பரேட்களிடம் இருந்து பெறுகிறது பாஜக.  அவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் இருக்கிறது.  ஆயிரம் கோடி ரூபாய் நிதி கொடுத்தால், தொழிலுக்கான லைசென்ஸ் கொடுப்பார் மோடி.  மேலும் கொடுத்தால், தேசத்தின் சொத்துகளை எடுத்துக் கொடுப்பார்.  அதற்கு மேலும் கொடுத்தால், நாடாளு மன்றத்தையே  எடுத்துக் கொடுத்துவிடுவார்.   தேர்தல் நிதி என்பது கம்யூனிஸ்டு களைப் பொறுத்தவரை போராட்ட நிதி.   மக்களின் உரிமைகளுக்காகப் போராடத் தான் நாம் நிதி திரட்டுகிறோம்.  நாடாளு மன்ற ஜனநாயகத்தை நாம் அப்படித் தான் பார்க்கிறோம்.  உள்ளாட்சி அமைப்போ, சட்டமன்றமோ, நாடாளு மன்றமோ இந்த மேடைகளை நாம் அப்படித்தான் பயன்படுத்துகிறோம்.

நமக்கான நிதியை நாம் கார்ப்பரேட்களி டம் கை நீட்டிப் பெறுவதில்லை.  இங்கே  போக்குவரத்து தொழிலாளர் அமைப்பி லிருந்து நிதி அளித்தனர்.  வங்கி, இன்சூ ரன்ஸ், சாலையோர வியாபாரிகள், டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் உள்பட சாதாரண மக்களிடையே சென்று திரட்டிய நிதி இது.  தெருவோரத்தில் மீன் விற்கும் பெண்மணியிடம் இருந்து பெற்ற காசு இது.   இது நம் வரலாற்றுப் பாரம்பரியம்.  கம்பீரமான தோழர் சிங்காரவேலரின் பாரம்பரியம்.  1918இல் இங்கிருந்து மிக  அருகே தான் இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான மெட்ராஸ் லேபர் யூனியன் அமைக்கப்பட்டது.  அந்த செங்கொடிப் பாரம்பரியம் நம்முடையது.  எளிய மக்களோடு நெருக்கமாக நின்று இயக்கம் நடத்துகிறோம். தங்களுக்கு செங்கொடியின் பாதுகாப்பு உண்டு என்று  நிற்கின்றனர் உழைப்பாளி மக்கள்.

இஸ்லாமியர் புனித மாதத்தில் அவர்களுக்கு எதிரான போர்  ஈத் பெருநாள் கொண்டாடும் இஸ்லா மிய சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகள்!  இந்தப் புனித மாதத்தில் தான் அமெரிக்க - இஸ்ரேல் படையினர் மிக மோசமான தாக்குதலை ஈரான் மீது தொடுத்துள்ளனர்.  இதுவரை நடந்திராத ஒரு நிகழ்ச்சிப்போக்கு ஆகும் இது. போர்க் குற்றவாளிகளான டிரம்ப்பும், யூத இனவெறிபிடித்த நேதன்யாகுவும் நடத்தும் இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு எதிராக ஒற்றைக் குரல் எழுப்பவில்லை மோடி அரசு.  மோடியின் மௌனம், மோடியின் சரணாகதியைக் குறிக்கிறது.  அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் யூத இனவெறி இஸ்ரேலுக்கும் அடிபணிந்து நிற்கிறது மோடி அரசு.   இது இந்தியாவின் நெடிய பாரம்பரி யத்திற்கு முற்றிலும் முரணானது.

2003இல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூட இராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது அதற்கு எதிராக ஒருமனதாக இந்திய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.  இந்தப் பாரம்பரியத்தை மீறிவிட்டது மோடி அரசு. ஆனால், இந்திய மக்கள் இந்தப்  போருக்கு எதிராகவும், ஈரானிய மக்களோடு, பாலஸ்தீன மக்களோடு  ஒருமைப்பாடு தெரிவித்தும் குரல் எழுப்பு கின்றனர். அதில் தமிழகத்தின் பங்கும் பாராட்டுக்கு உரியது. மோடி அரசின் அறிவிக்கப்படாத போர்  அறிவிக்கப்படாத ஒரு போரை இந்திய மக்கள் மீது மோடி அரசு தொடுத்து வருகிறது.  உழைப்பாளி மக்கள் காலம் காலமாகப் போராடி வென்றெடுத்த உரிமைகளை சிதைக்கும் நடவடிக்கை தான் நான்கு சட்டத் தொகுப்புகள்.

தொழி லாளி வர்க்கத்தை முதலாளிகளின் அடிமைகளாக மாற்றிச் சுரண்டலைக் கூர்மைப்படுத்தும் வேலை இது.  அதற்கு எதிரான பிப்ரவரி 12 அகில இந்திய வேலை  நிறுத்தப் போராட்டத்தில் சிறப்பாகப் பங்கேற்ற தமிழக உழைப்பாளி மக்க ளுக்கு வாழ்த்து கூற விரும்புகிறேன்.  இடது சாரிகள் முன்னெடுப்பால் சட்டமாகி, கிராமப்புற ஏழை மக்களின் வாழவதார த்தின்  நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தை ஒழித்துக் கட்டி அதற்குப் பதிலாக பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய திட்டத்தால் வேலையும் கிடைக்காது, கூலியும் கிடைக்காது.  பணிகளில் பல லட்சம் காலி இடங்களை ஒன்றிய அரசு நிரப்பாமல் இருக்கிறது.

தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவின ருக்கான இட ஒதுக்கீடு ஒழித்துக் கட்டப்படு கிறது.  பல்கலைக் கழகங்களில் ஒடுக்கப் பட்ட பிரிவு மாணவர்களுக்கு எதிரான சாதிய இழிவை நீக்க நடத்தப்பட்ட போரா ட்டங்களை அடுத்து யுஜிசி விதிமுறைகள் கொண்டு வரப்பட்டதையும் மேல்தட்டு தரப்பில் இருந்து தலையீடு செய்து முடக்கி வைத்துள்ளனர்.  மாற்றுப் பாலி னத்தவர் உரிமைகளுக்காக நெடிய போராட்டங்களை அடுத்து கொண்டு வரப்பட்ட திருநர் பாதுகாப்பு சட்டத்திலும் மோடி அரசு திருத்தங்களைக் கொண்டு வந்து, அவர்களையே தண்டனைக் குரியவர்களாக ஆக்கும் நிலையை உரு வாக்கி இருக்கிறது. எல்லா விதங்களிலும் மக்கள் அவதிப் படுகின்றனர்.

இந்தப் போர்க் குற்றவாளிகள் நடத்தும் போரால், அதை நிறுத்துமாறு குரல் எழுப்ப மோடி அரசு மறுப்பதால், இங்கே உள்நாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் விலை விண்ணை முட்டுகிறது.  எரிவாயு சிலிண்டர் விலையை அரசே அறுபது ரூபாய் உயர்த்திவிட்டது.

பெட்ரோல், டீசல் விலைகளும் உயர்கின்றன.  எளிய மக்களின் வீட்டு சமையலறையில் கூட இன்னல் பெருகிவிட்டது. பெண்ணுரிமைக்கு எதிரானவர்கள் பாஜக தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூரில் சாட்டை எடுத்து அடித்துக் கொண்டு ஒரு நாடகம் ஆடி னார்.  பெண்களுக்கு எதிரான கொடுமை களை கண்டித்து சாட்டையால் அடித்துக் கொள்ள வேண்டுமானால், அவர் பாஜக ஆளும் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா அங்கெல்லாம் சென்று சாட்டையால் அடித்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் வெறும் நாடகம்.  உண்மையில் அவர்கள் பெண்ணு ரிமைக்கு எதிரானவர்கள். பாஜக, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளாத ஆர்எஸ் எஸ் கருத்தியலைக் கொண்டிருக்கிறது. சமூக நீதியை அது மதிப்பதில்லை.  சாதி  ஒழிப்பு பேசிய அம்பேத்கரைக் கொண்டா டுவதுபோல் காட்டிக் கொண்டு சாதிய மேலாதிக்கத்தை வலுப்படுத்துவதையே விரும்புகிறது.

ஏப்ரல் 23 அன்று தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் ஆர்எஸ்எஸ் பாஜக அணியில் இடம் பெறும் கட்சிகள் அனைத்தையும்  முறியடிக்க வேண்டும்.  இது தமிழக வாக் காளர்களின் தலையாய கடமையாகும்.  மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்களையும் இடதுசாரி வேட்பாளர்களையும் களத்தில்  வெற்றி வாகை சூட வைக்க வேண்டும். ஜனநாயக மதசார்பற்ற சக்திகளை வெற்றி பெறச் செய்ய வேண்டும். மத நல்லிணக்கத்தின் கோட்டையாக உள்ளது தமிழ்நாடு. இந்த பாரம்பரியத்தைத் தொடர வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார். அவரது உரையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.வி.வேணு கோபாலன் மொழியாக்கம் செய்தார்.

முன்னதாக, மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா தனது தலைமை உரையில் சென்னை மாநகர உழைப்பாளி மக்க ளின் வாழ்விட உரிமை மற்றும் வாழ்வா தார உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுத்து வெற்றியும் பெற்றுவரும் மத்திய சென்னை மாவட்டப் பணிகளை எடுத்துரைத்தார்.  மத்தியக் குழு உறுப்பி னர் பி. சம்பத், தேர்தல் பிரச்சார பணி யிலும், நிதி வசூல் இயக்கத்திலும் சீரிய பங்களிப்பு செய்துவரும் மத்திய சென்னை மாவட்டத்திற்கு பாராட்டு தெரி வித்தார்.  மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வே.ஆறுமுகம் வரவேற்புரை ஆற்றினார். எழும்பூர் பகுதிக்குழு உறுப்பி னர் சீனிவாசன் நன்றி தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.