மாநில அந்தஸ்து பெற்றுத் தராத பாஜக கூட்டணியைப் புறக்கணிப்பீர்
1 Apr 2026, 4:02 pm
<p><strong>மாநில அந்தஸ்து பெற்றுத் தராத பாஜக கூட்டணியைப் புறக்கணிப்பீர்</strong></p>
<p>புதுச்சேரி மக்களுக்கு சிபிஎம் அறைகூவல்! புதுச்சேரி, ஏப். 01 - புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தராத என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை மக்கள் முற்றிலு மாகப் புறக்கணிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்தது. புதுச்சேரி லாஸ்பேட்டை சட்ட மன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆர். ராஜாங்கத்தை ஆதரித்து, 'அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்' சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் வாகனப் பிரச்சாரப் பொதுக்கூட்டம் லாஸ்பேட்டை தொகுதி யில் நடைபெற்றது. இந்தப் பிரச்சா ரத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய கட்சியின் புதுச்சேரி மாநிலச் செய லாளர் எஸ். ராமச்சந்திரன், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது முதலமைச்சர் ரங்கசாமி அளித்த வாக்கு றுதிகளைக் கடுமையாக விமர்சித்தார். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி இருந்தால் புதுச் சேரிக்கு மாநில அந்தஸ்து எளிதாகக் கிடைக்கும் என்று கடந்த தேர்தலின் போது ரங்கசாமி மக்களிடம் பேசினார். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவர் புதுச்சேரியின் மாநில உரி மைகளை பாஜகவிடம் முழுமையாக அடகு வைத்துவிட்டார் என்று ராமச்சந்தி ரன் குற்றம் சாட்டினார். கடந்த ஐந்து ஆண்டுகால 'இரட்டை எஞ்சின்' ஆட்சி யில் புதுச்சேரியில் எந்தவிதமான உருப்படியான வளர்ச்சித் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் சாடினார். எனவே, மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், மாநில சுயாட்சியை உறுதிப்படுத்தவும் புதுச்சேரி மக்கள் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி யைப் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆர். ராஜாங்கத்திற்கு வாக்களிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். முன்னதாக நடைபெற்ற இந்தப் பிரச்சாரத்தில், மார்க்சிஸ்ட் லெனி னிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகி சோ.பாலசுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதித் தலைவர் சுப்பையா ஆகியோர் சிபிஎம் வேட்பாளர் ராஜாங்கத்தை ஆதரித்துப் பேசினர். பெத்துசெட்டிப்பேட்டையில் தொடங்கிய இந்தப் பிரச்சாரப் பயணம், லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட நெசவாளர் நகர், சாந்தி நகர், அசோக் நகர் மற்றும் அரசு குடியிருப்புப் பகுதிகள் வழியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது. இந்நிகழ்வில் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் சுதா, பெருமாள், கொளஞ்சியப்பன், சத்தியா, கலியமூர்த்தி மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.</p>
