விழுதாய்த் தாங்க வேண்டும்!
20 Dec 2025, 2:23 pm
<p><strong>விழுதாய்த் தாங்க வேண்டும்!</strong></p>
<p>ஆல மரத்தைப் பாரு அதிலே விழுது நூறு. நாலு பக்கம் கிளைகள் நடுவில் மரமும் இருக்கு. காலப் போக்கில் மரத்தைக் கறையான் அரித்த தாங்கே நீள மாக அடியில் நெடிய பொந்தும் இருக்கு காற்றும் மழையும் அடிக்கும் கல்லாய் மரமும் நிற்கும். நேற்று அடித்தப் புயலில் நில்லா தென்று நினைத்தாய் ஆனால் மரமும் இருக்கு. அதற்குக் காரணம் கண்ணே தூணாய் இருக்கும் விழுது தொடர்ந்து தாங்கும் முன்னே அதனால் மரமும் இருக்கு அடிக்கும் காற்று மழைக்கும் எதற்கும் சாயா திருக்கும் என்று தெரிந்து கொள்வாய். அம்மா அப்பா தளர்ந்தால் அவர்க்கு நீயே விழுது. தம்பி பாப்பா நீங்கள் தாங்க வேண்டும் இதனை.</p>
