தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அவர்களுக்கு பிணை மறுத்து உங்களை அநீதிச் சிறையில் அடைத்துக் கொண்டீர்கள் மை லார்ட்! - க.கனகராஜ்

17 Jan 2026, 2:42 pm
அவர்களுக்கு பிணை மறுத்து உங்களை  அநீதிச் சிறையில் அடைத்துக் கொண்டீர்கள் மை லார்ட்!  -  க.கனகராஜ்
<p><strong>அவர்களுக்கு பிணை மறுத்து உங்களை &nbsp;அநீதிச் சிறையில் அடைத்துக் கொண்டீர்கள் மை லார்ட்!</strong></p> <p>அவர்கள் இரண்டு பேர். உமர் காலித் மற்றும் ஷார்ஜீல் இமாம். உமர் காலித் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழ கத்தில் தனது இளங் கலை, முதுகலை, &nbsp;எம்.பில் மற்றும் &nbsp;முனைவர் பட்ட ஆராய்ச்சி அனைத்தை யும் முடித்தவர். முனைவர் பட்ட ஆய்விற்கு அவர் தேர்ந்தெடுத்தது &lsquo;ஆங்கிலேயர் ஆட்சியில் சிங்பும் ஆதிவாசி மக்களின் மாற்றம்&rsquo;. அந்த ஆய்வின் தரம் மற்றும் நுணுக்கமான தரவுகளுக்காக அது கல்விப்புலத்தில் இன்றும் கொண்டாடப்படு கிறது. இமாம் கம்ப்யூட்டர் சயின்சில் பி.டெக், எம்.டெக் இரண்டையும் ஐ.ஐ.டி பம்பாயில் முடித்துவிட்டு இரண்டு ஆண்டுகள் மென் பொருள் துறையில் ஒரு பொறியாளராக வேலை செய்தவர். பின்னர் ஜவஹர்லால் &nbsp;நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை யில் முதுகலை பட்டமும், எம்.பில் பட்டமும் பெற்றவர். அதன்பிறகு முனைவர் பட்டத்திற் கான ஆராய்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டி ருந்தார். பசுவதைக்கும், மதமோதலுக்கும் இடையிலான சமூகத் தொடர்பைப் பற்றித்தான் அவருடைய ஆராய்ச்சி அமைந்திருந்தது. இரண்டு அறிவுஜீவிகளும் இப்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். கல்லறைக்குள் வாழும் வாழ்க்கை காலித் மார்க்சியத்தைப் பின்பற்றுபவர். இமாம் முற்றிலுமாக இஸ்லாம் மதத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். சிறையில் இருக்கும் உமர் காலித் ஒருமுறை உருக்கமாக எழுதியதை இங்கு குறிப்பிடுவது அவசியம். &ldquo;ஐந்து வருடங்கள் முடிந்து விட்டது; இது அரை தசாப்தம். இந்தக் காலம் ஒரு முனைவர் ஆய்வை முழுமையாக முடிப்பதற்குப் போது மான காலம்; ஒரு கௌரவமான வேலையைத் தேடிக்கொள்வதற்குப் போதுமான காலம்; உங்கள் வாழ்க்கைக்கான காதலைக் கண்ட டைவதற்குப் போதுமான காலம்; திருமணம் செய்து கொள்ளவும், ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்கும் போதுமான காலம்; பிறந்த குழந்தையின் தோற்றம் நினைவில் கொள்ள முடியாத அளவிற்கு மாறிப்போவ தற்கான காலம்; உலகம் காசாவில் நடந்த ஒரு மிகப்பெரிய இன அழிப்பை சகஜமாகக் கடந்து போவதற்கான காலம்; நம் பெற்றோர் கள் வயது முதிர்ந்து தள்ளாடுவதற்குப் போது மான காலம்; இந்தக் காலம் நாங்கள் விடுதலை யாவதற்கு மட்டும் போதுமான கால மில்லையா?&rdquo; இதுமட்டுமல்ல; புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் தஸ்தாயெவ்ஸ்கியின் வரிகளை அவர் சிறைச்சுவர்களுக்குள்ளிருந்து மேற்கோள் காட்டுகிறார்: &ldquo;நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், ஆனால் உயிரோடு இல்லை. நாங்கள் கல்லறைக்குள் இருக்கி றோம், ஆனால் இறந்து போகவும் இல்லை.&rdquo; தஸ்தாயெவ்ஸ்கி சொன்ன வார்த்தைகள் 150 ஆண்டுகள் கடந்து மோடியின் ஆட்சி யில் இப்போது இந்தியாவில் மீண்டும் உயிர் பெற்றுள்ளன. மோடி பதவியில் இருக்கும் வரை நான் வெளியே வர முடியாது போலி ருக்கிறதே, எனக்கு பிணை கொடுக்க மாட்டார்க ளோ? என்ற ஆழமான வேதனையில் அவர் இப்படிப் பேசுகிறார். இதற்காக வருத்தப்பட வேண்டியதும், கவலைப்பட வேண்டியதும், கோபப்பட வேண்டியதும் அவர் மட்டுமல்ல; இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரும்தான். நீதிமன்றங்களின் &nbsp;காலதாமதப் பட்டியல் அப்படி என்னதான் நடந்து விட்டது? இதோ ஒரு கணக்கைப் பாருங்கள்: 55 முறை நீதிபதி இல்லை என்று கூறி தள்ளி வைக்கப்பட்ட விசாரணைகள். ஆள்பற்றாக்குறை என்கிற காரணத்தைச் சொல்லி ஒத்தி வைக்கப்பட்ட 11 விசாரணைகள். நீதிமன்றத்திற்குப் போதிய நேரம் இல்லை என்பதால் தள்ளி வைக்கப்பட்ட 26 விசாரணைகள். அரசு வழக்கறிஞர் விடுப்பு அல்லது அவகாசம் வேண்டிக்கொண்டதால் தள்ளிப்போன 59 விசாரணைகள். வழக்கறி ஞர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் நடை பெறாத 4 விசாரணைகள். இப்படியாக, உமர் காலித் கீழமை நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை பிணை கேட்டு ஒவ்வொரு படிக்கட்டாகப் போராடிக் கொண்டிருக்கிறார். இப்படிப் போராடுகிற ஒருவருக்கு அத்த கைய எண்ணம் ஏற்பட்டதில் எந்தத் தவறும் இருக்க முடியாது. நீங்கள் என்ன பெயரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங் கள். ஜென் சி இளைஞர்கள், 90ஸ் கிட்ஸ், ஐ.டி. பாய்ஸ், அரசியல் கட்சிகள் என்று என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கு நீதி மறுக்கப்படும் சமூகம், அதுவும் உச்சநீதிமன்றமே அதைத் தள்ளிப்போடுகிற போது, &ldquo;நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், ஆனால் உயிரோடு இல்லை&rdquo; என்கிற அந்த வரிகளுக்குள் அத்த னை வலியும் அடக்கம். அப்படி என்னதான் செய்து விட்டார்கள் இவர்கள் என்று நாம் நிதானமாகச் சிந்திக்கச் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். ஷாகின்பாக் போராட்டமும் ஆளும் தரப்பின் வன்மமும் குடியுரிமையைப் பறிக்கும் சி.ஏ.ஏ சட்டத்திற்கு எதிராக நாம் அனைவரும் வீதியில் இறங்கினோம். இஸ்லாமியர்கள் ஒரு ஜன நாயகக் கோரிக்கைக்காக மட்டுமல்லாமல், தாங்கள் தாய்நாடு அற்றவர்களாக ஆக்கப்பட்டு விடுவோமோ என்கிற இருப்பியல் அச்சத்தினால் போராடினார்கள். அதுவரை வீட்டை விட்டுப் பொது நிகழ்ச்சிகளுக்காக வெளிவராத பெண்கள் தெருக்கள்தோறும் நிறைந்திருந்தார்கள். பர்தாவுக்குள் இருந்தே பழகிப் போன முகங்கள் பாஜக அரசாங் கத்தின் அடக்குமுறைக்கு முகம் கொடுக்கத் துணிந்தார்கள். அந்தப் போராட்டக் காட்டா ற்றில் ஒன்றுதான் தில்லியின் ஷாகின்பாக். இந்தப் போராட்டத்தைச் சீர்குலைக்க ஆளும் கட்சியின் அட்டூழியங்கள் களத்தில் இறக்கப்பட்டன. 2020 ஜனவரி 28 அன்று பாஜகவின் தில்லி நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா, &ldquo;ஷாகின்பாக் போன்ற போராட்டங்கள் அனுமதிக்கப்பட்டால் இஸ்லா மியர்கள் விரைவில் உங்கள் வீடுகளுக்குள் படையெடுப்பார்கள், உங்கள் சகோதரிக ளையும், மகள்களையும் பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்குவார்கள்&rdquo; என்று விஷத்தைக் கக்கினார். அதற்கு ஒருநாள் முன்னதாக மோடி அரசாங்கத்தில் அமைச்ச ராக இருந்த அனுராக் தாக்கூர், &ldquo;துரோகி களைச் சுட்டுத் தள்ளுங்கள்&rdquo; (கோலி மாரோ) என்று வெறித்தனமாகப் பேசினார். பிப்ரவரி 23-ஆம் தேதி பாஜகவின் கபில் மிஸ்ரா, &lsquo;காவல்துறையினர் அந்தப் பெண்களை அகற்றவில்லையென்றால் நாங்களே அகற்று வோம்&rsquo; என்று மிரட்டல் விடுத்தார். கலவரக் கணக்குகளும் ஒருதலைப்பட்ச நீதியும் இதனைத் தொடர்ந்துதான் தில்லியில் 2020 பிப்ரவரி 20-23இல் மிகப்பெரிய கலவ ரம் உருவாக்கப்பட்டது. வன்முறை கட்டவிழ்த்து &nbsp;விடப்பட்டது. காவல்துறை கணக்குப்படி 53 பேர் கொல்லப்பட்டார்கள். 468 கடைகள், 185 வீடுகள், 19 வழிபாட்டுத் தளங்கள், நூற்றுக் கணக்கான வாகனங்கள் தீக்கிரையாக்கப் பட்டன. கொல்லப்பட்ட 53 பேரில் 40 பேர் இஸ்லாமியர்கள், 13 பேர் இந்துக்கள். அழிக்கப்பட்ட 468 கடைகளில் 250 கடைகள் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானவை. ஆனால் காவல்துறைக்கோ 152 கடைகள் யாருக்குச் சொந்தமானது என்று தெரிய வில்லையாம். அழிக்கப்பட்ட 185 வீடுகளில் 90 வீடுகள் இஸ்லாமியருக்கும், 18 வீடுகள் இந்துக்க ளுக்கும், 77 வீடுகள் யாருடையது என்று தெரிய வில்லை என்றும் காவல்துறை மழுப்புகிறது. 19 இஸ்லாமிய வழிபாட்டுத் தளங்களும், 6 இந்து வழிபாட்டுத் தளங்களும் அழிக்கப் பட்டன. இவ்வளவு சேதங்கள் நடந்தும், கைது செய்யப்பட்டவர்களும் சிறையில் வாடுபவர்களும் இஸ்லாமியர்கள் மட்டுமே. சங்பரிவாரின் வெறிப்பிடித்தக் கூட்டத்தின் ஒருவர் கூடக் கைது செய்யப்படவில்லை; ஏன், அவர்கள் மீது ஒரு வழக்கு கூடப் பதியப் படவில்லை. இது இந்தியாவில் தான் நடந்து கொண்டிருக்கிறது. எனவேதான் உமர் காலித் கேட்கிறான், &ldquo;அரை தசாப்தம் போதாதா? பிணை கொடுக்க மாட்டீர்களா?&rdquo; என்று. பிணை மறுக்கப்படும் பின்னணி கடந்த ஜனவரி 5-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உமருக்குப் பிணை மறுத்துவிட்டது. &ldquo;இன்னும் ஓராண்டு கழித்து வேண்டுமானால் முயற்சி த்துப் பாருங்கள்&rdquo; என்று நீதிமன்றம் கருணை(?) காட்டியிருக்கிறது. உச்சநீதிமன் றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிகளில் இருவர் டி.ஒய்.சந்திரசூட்டும், பி.ஆர். கவாயும் அந்த வழக்கை விசாரிக்கவே தயங்கி னார்கள். உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்தவர்கள் தீர்ப்புச் சொல்ல நீண்ட காலம் எடுத்துக் கொண்டார்கள்; அல்லது தீர்ப்புச் &nbsp;சொல்வதற்கு முன்பாகவே வேறு மாநி லத்திற்கு மாற்றப்பட்டார்கள். &ldquo;பிணை என்பது விதி; சிறை என்பது விதி விலக்கு&rdquo; (Bail is the rule, jail is the exception) என்று உச்சநீதிமன்றமே சொன்னா லும், அது இவர்களுக்கு மட்டும் பொருந்த வில்லை. ஊருக்குத் தான் நீதி, உமருக்கும் இமாமுக்கும் இல்லை என்கிறது உச்சநீதி மன்றம். அதற்கு ஒரு காரணமும் சொல்லியி ருக்கிறது. காவல்துறை சொல்வதை அப்படியே ஏற்றுக் கொண்டு மற்றவர்களுக்கு காட்டிய கருணையை இவர்களுக்கு காட்ட முடி யாது; ஏனென்றால் இவர்கள் தலைமை தாங்கியவர்கள் என்கிறது. மற்றவர்களுக்கும் அப்படி ஒன்றும் மகா கருணை காட்டிவிட வில்லை. அவர்களுக்கு பிணை வழங்கும் போது இரண்டு லட்சம் ரூபாய் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்; தில்லியிலேயே இருக்க &nbsp;வேண்டும்; &nbsp;பாஸ்போர்ட்டை காவல்நிலை யத்தில் கொடுத்து விட வேண்டும்; வாரம் இரு முறை குற்றவியில் காவல் நிலையத்தில் ஆஜ ராக வேண்டும்; அச்சு ஊடகம், மின்னணு ஊடகம், சமூக ஊடகம் எவற்றிலும் ஒரு வார்த்தைக் கூட எழுதக் கூடாது, பேசக் கூடாது; &nbsp;வழக்கைப் பற்றியோ, அதில் கலந்து கொள்ப வர்கள் பற்றியோ எதுவும் சொல்லக் கூடாது; எந்தக் கூட்டத்திற்கும் போகக் கூடாது; பேரணி, பொதுக் கூட்டம், நேரடி, மெய்நிகர் என்று எந்த வடிவத்திலும், எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாது. மொத்தத்தில் அவர்கள் சிறைக்கு வெளியே இருப்பார்கள். ஆனால், கைதிகளாகத்தான் இருப்பார்கள். இப்படி யொரு பிணையை வேறெங்கும் கண்டிருக்க முடியுமா என்று தெரியவில்லை. &nbsp;அரசாங் கங்கள், அதிகாரிகள் இப்படி பேசுவதை கேட்டி ருக்கிறோம். ஆனால், அதைச் சொல்லி யிருப்பது நீதிமன்றங்கள். ஆனால், இதுவும் கூட உமருக்கும், இமாமுக் கும் இல்லை. நீண்டகால அநீதியின் வரலாற்றுத் தடங்கள் இதுபோன்று பல்வேறு வழக்குகளில் இஸ்லாமிய இளைஞர்கள் திட்ட மிட்டு உள்நோக்கத்துடன் கைது செய்யப்படு வது வழக்கமாகியிருக்கிறது. 2002-ஆம் ஆண்டு குஜராத் அக்சார்தம் கோவில் தாக்குதல் வழக்கில் 6 இஸ்லாமிய இளை ஞர்கள் சிக்க வைக்கப்பட்டார்கள். 3 பேருக்கு மரண தண்டனை வரை வழங்கப்பட்டது. ஆனால், 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் இவை அனைத்தையும் ரத்து செய்து, புலனாய்வு அமைப்புகளைக் கடுமையாக விமர்சித்தது. அத்தனை பேரும் 11 அல்லது 12 ஆண்டுகள் சிறையில் இருந்தார்கள். எத்தனை கொடூரமான நிலைமை இது. இதேபோன்று, 2007-ஆம் ஆண்டு ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். உடனடியாக நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் சுற்றி வளைக்கப்பட்டு 27 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. பின்னர், இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தால் 2008-ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர். ஆந்திரப் பிரதேச அரசாங்கம் அவர்களுக்கு நிவாரணம் வழங்கியது. நீதிமன்றங்கள் விடுவித்தாலும், அந்த இளைஞர்கள் மீது &lsquo;பயங்கரவாதிகள்&rsquo; என்கிற கறை பொதுப் புத்தியில் படிந்து விடு கிறது. இது தவிர, இந்துக்கள், இஸ்லாமியர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் ஏராளமான பேர் விசாரணைக் கைதிகளாகவே பல ஆண்டுகள் சிறையில் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது காலித்தும், இமாமும் வேறென்ன செய்து விட முடியும்? இந்தியக் குடிமக்கள் இதனை ஏதோ ஒரு தனிநபரின் பிரச்சனையாகக் கருதிவிடக் கூடாது. இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நாளை நமக்கே கூட வரலாம். லாப நஷ்டக் கணக்கு களைப் பார்க்காமல், இது ஒரு ஜனநாயக நாட்டில் இருக்க வேண்டிய மிகவும் அடிப்ப டையான உரிமை என்பதால் நாம் அனை வரும் ஒன்றுபட்டு உரக்கக் குரலெழுப்ப வேண்டும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.