தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“நகைச்சுவையை நசுக்க முடியாது”

31 Jan 2026, 5:27 pm
“நகைச்சுவையை நசுக்க முடியாது”

“நகைச்சுவையை நசுக்க முடியாது”

இந்தியாவில் காமெடியை அவ்வளவு எளிதாக நசுக்கிவிட முடியாது என்கிறார் வீர்தாஸ். தனது நகைச்சுவை நிகழ்வுகளில், மக்கள் பிரச்சனைகளைத் தீவிரமாகப் பேசுபவர் பிரபல நகைச்சுவை நடிகர் வீர் தாஸ். நகைச்சுவை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தும் இவர்  18 திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நகைச்சுவை தாக்குதலுக்கு உள்ளாவது பற்றி அவரிடம் கேட்டபோது, “அதையெல்லாம் நசுக்க முடியாது. 35 வயதுக்குக்கீழே உள்ளவங்கதான் இந்தியாவுல அதிகம். அவங்க கைல ஸ்மார்ட் ஃபோன் இருக்கு. பார்வையாளர் எண்ணிக்கை ரொம்பப் பெருசு. நகைச்சுவையை நசுக்க அவங்க அனுமதிக்க மாட்டாங்க” என்கிறார்.

இரண்டு இந்தியாக்கள்” தனது நிகழ்வுகளில், மக்கள் பிரச்சனைகளையும் தொடுகிறார். இரண்டு இந்தியாக்களைப் பற்றி அவர் தொடர்ந்து பேசுகிறார். ஒன்று, பணக்காரர்களுக்கானது. மற்றொன்று ஏழைகளுடையது. இதற்கு ஆளும் பாஜக தரப்பில் எதிர்ப்புகள், இழிசொற்கள் வந்து விழுகின்றன. பெண்கள் பாதுகாப்பைப் பற்றியும் அவரது கருத்து வலுவாக உள்ளது. “பகலில் பெண்களைத் தெய்வமாக வழிபடும் நாட்டில், இரவில் கூட்டுப் பலாத்காரத்திற்கு உள்ளாகிறார்கள்” என்கிறார்.

ஒரே இரவில்.. ஒரேநாள் இரவில் 17 ஆயிரம் பேர் உலகக் கால்பந்துப் போட்டிகளைக் காண்பதற்காக வாங்கிய டிக்கெட்டுகளை ரத்து செய்துள்ளனர். அமெரிக்காவில் நிலவும் பதற்றமான சூழலைக் காரணம் காட்டியிருக்கிறார்கள். ரத்து செய்வது தொடர்கிறது. இவர்களில் பலரும் கனடா மற்றும் மெக்சிகோவில் நடக்கும் ஆட்டங்களுக்குச் செல்லத் திட்டம். உலகக் கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் செப் பிளாட்டரும் ரசிகர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

வெகு சிலரில் ஒருவர்...

இவர் பிகாஷ்ரஞ்சன் பட்டாச்சார்யா. மேற்கு வங்கத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர். போட்டித் தேர்வுகளில் மோசடி என்றால், உடனடியாக தேர்வர்கள் இவரைத்தான் நாடுவார்கள். எந்தவித சமரசமும் இல்லாமல் வாதிட்டு நீதியைப் பெற்றுத் தருவார்.  இவரது பதவிக்காலத்தில் முதல் இரண்டு ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக, தொகுதி மேம்பாட்டு நிதி கிடைக்கவில்லை. அடுத்த மூன்று ஆண்டுகளில் 96 திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார். இவற்றில் பெரும்பாலும் அரசுப்பள்ளிகளுக்கான கட்டிடங்களேயாகும்.  மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆட்சி போன பிறகு, கமிஷன் இல்லாமல் திட்டங்களைக் கொண்டு வரும் எம்.பிக்கள் வெகு சிலர்தான். அவர்களில் இவரும் ஒருவர் என்கிறார்கள் அரசு அதிகாரிகள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலங்களவை சென்ற பிகாஷ்ரஞ்சன் மார்ச் 2026ல் ஓய்வு பெறுகிறார்.

ஒரே இரவில்..

ஒரேநாள் இரவில் 17 ஆயிரம் பேர் உலகக் கால்பந்துப் போட்டிகளைக் காண்பதற்காக வாங்கிய டிக்கெட்டுகளை ரத்து செய்துள்ளனர். அமெரிக்காவில் நிலவும் பதற்றமான சூழலைக் காரணம் காட்டியிருக்கிறார்கள். ரத்து செய்வது தொடர்கிறது. இவர்களில் பலரும் கனடா மற்றும் மெக்சிகோவில் நடக்கும் ஆட்டங்களுக்குச் செல்லத் திட்டம். உலகக் கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் செப் பிளாட்டரும் ரசிகர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

நாங்கள் பண்டங்கள்..

நாங்கள்(பெண்கள்) இனிமேலும் மக்கள் அல்ல. நீண்ட காலமாகவே நாங்கள் பண்டங்களாகவே இருந்துள்ளோம். இவைதான் எங்கள் மீதுள்ள முத்திரைகள். தற்போது பரபரப்பாக விற்பனையாகி வரும் “சப்ஸ்டேக் கேர்ள்ஸ்” நூலின் ஆசிரியர் ஃபிரெயா இந்தியா.

இதுதான் முதல் சாலை

மகாத்மா காந்தி பெயரில் உள்ள 100 நாள் வேலைத்திட்டத்தை ஒன்றிய அரசு காலி செய்கிறது.  இந்நிலையில் அவர் பெயர் வைக்கப்பட்ட சாலைகள் போன்றவற்றிலும் மாற்றங்கள் வரலாம் என்று செய்தி பரவுகிறது. அவர் பெயரை முதன்முறையாக 1948 ஆம் ஆண்டில் பெங்களூருவில் சவுத் பரேடு என்றழைக்கப்பட்ட சாலைக்குதான் வைத்தனர். தற்போதும் அந்தப் பெயரில்தான் அந்த சாலை உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.