வாக்காளர் அட்டையில் எழுத்துப் பிழைகள் இருந்தாலும் வாக்களிக்கலாம்!
23 Mar 2026, 3:39 pm
<p><strong>வாக்காளர் அட்டையில் எழுத்துப் பிழைகள் இருந்தாலும் வாக்களிக்கலாம்!</strong></p>
<p>தலைமை தேர்தல் அதிகாரி தகவல் சென்னை, மார்ச் 23- வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எழுத்துப் பிழைகளை காரணம் காட்டி வாக்கு ரிமை மறுக்கப்படாது என்று தலைமை தேர்தல் அதி காரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், சி-விஜில் செயலி வாயிலாக இதுவரை 794 புகார்கள் பெறப்பட்டுள்ள தாகவும், அவற்றில் 20 புகார்கள் பரிசீலனை யில் உள்ளதாகவும், மீதமுள்ள அனைத்து புகார் களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களில் 50 சதவீதம் பேருக்கு அட்டை தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறு வதற்கு முன்பே அட்டை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தத் திட்ட மிடப்பட்டுள்ளதாகவும், தேசிய-மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு இலவச ஒளி பரப்பிற்கான மின்னணு வவுச்சர்கள் வழங்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எழுத்துப் பிழை இருந்தாலும் வாக்களிக்கலாம்! தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் அல்லது முகவரியில் எழுத்துப் பிழைகள் இருந்தால் வாக்களிக்க முடியுமா என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் தெளிவான விளக்கம் அளித்துள்ளது. வாக்காளர் அட்டையில் காணப்படும் தட்டச்சுப் பிழைகள் அல்லது சிறிய எழுத்துப் பிழைகள் போன்ற குறைபாடுகளை ஆணையம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. புகைப்படம் மற்றும் ஏனைய விவரங்கள் மூலம் ஒருவரின் அடையா ளத்தை உறுதிப்படுத்த முடியும் பட்சத்தில், எழுத்துப் பிழைகளை காரணம் காட்டி வாக்குரிமை மறுக்கப்பட மாட்டாது என ஆணையம் தெரிவித்து உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 மற்றும் 1960 ஆம் ஆண்டின் தேர்தல் பதிவு விதிகளின்படி, ஒவ்வொரு வாக்காளருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவது கட்டாயமா கும். வாக்குச்சாவடியில் அட்டையைக் காட்டத் தவ றினால் வாக்களிக்க அனுமதி மறுக்கப்படலாம் என்பதால், வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்ப தும் அட்டையை சரியாகப் பயன்படுத்துவதும் சம அளவு முக்கியமானவை என ஆணையம் வலி யுறுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கிட்டத்தட்ட நூறு சதவீத வாக்காளர்களுக்கும் புகைப்படத்து டன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட் டுள்ளதாக தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தி யுள்ளது. ஏப்ரல் 23 அன்று நடைபெறும் தேர்த லில் அட்டையில் சிறிய பிழைகள் இருந்தாலும் அஞ்சாமல் வாக்களிக்கலாம் என ஆணையம் வாக்காளர்களுக்கு உறுதி அளித்துள்ளது. இறுதி வாய்ப்பு தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தகுதிவாய்ந்த குடி மக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை தேர்தல் ஆணையத்தின் அதி காரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், விடுபட்ட நபர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்ப்பதற்கு விண்ணப் பிக்க மார்ச் 26 ஆம் தேதி கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பெயர் இடம்பெறாதவர்கள், படிவம்-6 மூலம் சம்பந்தப் பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடமோ அல்லது இணையவழி சேவை மூலமோ விண்ணப்பிக்க லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளதால், பட்டியலில் பெயர் இடம் பெறாத நபர்கள் இந்த இறுதி வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.</p>
