தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

28 Jan 2026, 2:33 pm
திருச்சி விரைவு செய்திகள்

உங்கள் ஊர் ரேசன் கடை திறந்துள்ளதா? என போனில் அறியலாம்

நாகர்கோவில். ஜன. 28- உங்கள் ஊர் ரேசன் கடை திறந்து உள்ளதா என .உங்கள் செல்போனிலேயே தெரிந்து கொள்ளும் வசதியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது. ரேசன் கடைக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்புவது பலருக்கும் அன்றாடப் பிரச்சனையாக இருக்கிறது. நீண்ட தூரம் நடந்து சென்ற பிறகு கடை மூடியிருப்பதோ அல்லது நாம் கேட்கும் பொருள் ஸ்டாக் இல்லை என்று சொல்வதோ மிகுந்த மனச்சோர்வை அளிக்கும். இந்தத் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகை யில், தமிழக அரசு எளிய எஸ்எம்எஸ் சேவையை அறி முகப்படுத்தியுள்ளது. உங்கள் ரேசன் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 89399 22990 அல்லது 97739 04050 ஆகிய எண்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் போதும், கடையின் நிலை மற்றும் இருப்பு விவரங்களை வீட்டிலிருந்தே துல்லிய மாகத் தெரிந்து கொள்ளலாம். இந்தச் சேவையைப் பயன்படுத்த, குறிப்பிட்ட குறியீடு களை எஸ்எம்எஸ் செய்ய வேண்டும். உங்கள் கடையில் என்னென்ன பொருட்கள் கையிருப்பில் உள்ளன என்பதை அறிய ஞனுளு 101 என்றும், அன்றைய தினம் கடை திறந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள PDS 102 என்றும் டைப் செய்து மேற்கண்ட எண்களுக்கு அனுப்பினால், உடனடியாகத் தமிழிலேயே விரிவான தகவல் உங்களுக்கு வந்து சேரும். இதன் மூலம் தேவை யற்ற அலைச்சலையும் நேர விரயத்தையும் தவிர்க்க முடியும்.

குமரி சொத்தவிளை பீச்சில் உள்வாங்கிய கடல் கடலோர மக்கள் அச்சம்

நாகர்கோவில். ஜன. 28- குமரி மாவட்டம் சொத்தவிளை பீச்சில் கடல் உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் சொத்தவிளை கடற்கரை யில் திடீரென கடல் உள்வாங்கியதால் பாசிபடர்ந்த  பாறைகள் வெளியே தெரிந்தன. கடல் உள்வாங்கியதால் சுனாமி போன்ற பேரிடர்கள் வந்துவிடுமோ என கடலோர கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தம்பத்துகோணம் தென்னந்தோப்பில்  ஆண் சடலம் மீட்பு  : போலீசார் விசாரணை

நாகர்கோவில்.ஜன, 28- கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தம்பத்துகோணம் கார்த்திகை வடலி,ஆற்றோரம் உள்ள தென்னந்தோப்பு உள்ளது.இங்கு நிர்வாணமாக வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில்  ஆண் சடலம் கிடந்தது. இது குறித்து  அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் ஒரு கொலை நடந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விதிமுறை மீறி இயக்கிய கனிமவள லாரிக்கு அபராதம்

அருமனை, ஜன. 28- கன்னியாகுமரி வட்டத்தில் கனிம வளம் கொண்டு செல்கின்ற வாகனங்களால் அடிக்கடி உயிர்ப்பலிகள் நிகழ்கின்றன. இதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பு மக்கள் கனரக வாகனங்களை இயக்கக் கூடாது என்றும் ஆள் நடமாட்டம் இல்லாத நேரங்களில் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி  போராட்டங்கள் நடத்தி வந்தனர்.  இந்நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் குமரி மாவட்டத்தில் கனரக வாகனங்கள் மற்றும் கனிம வளம் கொண்டு செல்கின்ற வாகனம் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை கனரக வாகனங்கள் சென்றுவர அனுமதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 7:30 மணி அளவில் கனிம வளம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இதை பார்த்த அருமனை போலீசார் லாரியை தடுத்து நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரித்த போது அதில் லாரி ஓட்டி வந்தவர் பெயர் கிறிஸ்துதாஸ் என்பது தெரிய வந்தது .மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்து க்கு முன்னதாகவே வந்ததால் அந்த லாரிக்கு ரூ. 3 500 அபராதம் அருமனை போலீசாரால் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.