தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

3 Dec 2025, 2:59 pm
திருச்சி விரைவு செய்திகள்
<p><strong>காவல் சார்பு ஆய்வாளர் பணி மாதிரி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்</strong></p> <p>மயிலாடுதுறை, டிச.3 - தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 3352 காவல் சார்பு ஆய்வாளர் எழுத்துத் தேர்விற்காக விண்ணப்பங்கள் ஏற்கனவே டி.என்.யு.எஸ்.ஆர்.பி.-யால் பெறப்பட்டுள்ளது. தற்போது பொது ஒதுக்கீடு மற்றும் துறை ஒதுக்கீட்டிற்கு எனத் தனித்தனியே நடத்தப்பட்டு வந்த எழுத்துத் தேர்வா னது ஒரே தேர்வாகப் பொது பிரிவினர் மற்றும் துறை பிரிவி னர் இருவருக்கும் சேர்த்து பொது அறிவு (80 கேள்விகள்) மற்றும் சைக்காலஜி (60 கேள்விகள்) தேர்வில் 70 மதிப்பெண் ணுக்காகவும், உடன் தமிழ் தகுதி தேர்வு 100 மதிப்பெண்ணுக் காகவும் நடத்தப்பட உள்ளது என டி.என்.யு.எஸ்.ஆர்.பி. யால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் &nbsp;தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாகச் செயல் பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் உத்தேசமாக டிசம்பர் 2025இல் நடைபெறவுள்ள எழுத்துத் தேர்விற்கு இலவச மாதிரித் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. &nbsp;கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்ப படிவம், பாஸ்போர்ட் அளவுப் புகைப்படம், ஆதார் &nbsp;அட்டை நகல் ஆகியவற்றுடன் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காலை 10 மணிக்கு 2 ஆவது தெரு, பாலாஜி &nbsp;நகர், கால் டாக்ஸி பெட்ரோல் பங்கிலிருந்து பூம்புகார் செல்லும் &nbsp;வழி, மயிலாடுதுறை என்ற முகவரியில் செயல்பட்டு வரும் &nbsp;மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகுமாறும், பதிவு செய்து கொள்ள &nbsp;9499055904 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரி வித்துள்ளார். சாலை, குடிநீர் வசதி கோரி ஜன.28-இல் தர்ணா போராட்டம் தஞ்சாவூர், டிச.3 - தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி கிராமம், தமிழ்ப் பல்கலைக் கழக வளாக குடியிருப்போர் நலச்சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. துணைச் செயலாளர் சிவசாமி வரவேற்றார். தலைவர் குருமூர்த்தி தலைமை உரையாற்றினார். செயலா ளர் சீதாலட்சுமி செயல் அறிக்கை, பொருளாளர் ராஜன் வரவு- செலவு அறிக்கை வாசித்தனர். &nbsp;இக்கூட்டத்தில், ஜன. 3 ஆம் தேதி சங்கம் சார்பில் சமத்து வப் பொங்கலும், ஜன.26 ஆம் தேதி குடியரசு தின விழாவும் &nbsp;கொண்டாட வேண்டும். விடுபட்ட சாலைகளை அமைத்தல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தருதல், முறையாக குப்பைகளை அள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை, &nbsp;அத்தியாவசிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பலமுறை உள்ளாட்சித் துறையினரிடம் மனுக்கள் அளித்தும் &nbsp;இதுவரை தீர்வு காணப்படவில்லை. எனவே, ஜன.28 ஆம் &nbsp;தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தர்ணா போராட் டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மகளிர் அணி தலைவி கமலா மற்றும் 12 பெண் கள் உட்பட 35 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அமைப்புச் செயலாளர் மருதமுத்து நன்றி கூறினார். சாலைகளில் கால்நடைகள் திரிந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம் திருச்சிராப்பள்ளி, டிச.3 - திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொது சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க கோரியும், வாகனங்களில் செல்லும் பொதுமக்களுக்கு விபத்துகள் ஏற்படுவதாகவும், பல &nbsp;புகார்கள் வருகின்றன. &nbsp;இதைத் தொடர்ந்து சாலைகளில் சுற்றித் திரியும் மாடு களை பிடித்து இ.பி சாலையில் அமைந்துள்ள இம்மாநக ராட்சியின் பட்டியில் பாதுகாத்து பராமரிக்கும் பணிகள் வெளிக் கொணர்வு முறையில் தனியார் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளைப் பிடித்து கால்நடை உரிமையாளர்களிடம் ஒரு மாட்டிற்கு ரூ.2500 அப ராதம் பெற்று எச்சரிக்கை செய்து ஒப்படைக்கப்பட்டு வரு கிறது. மேலும் பிடிக்கப்பட்ட மாடுகளை, ஒரு வாரத்திற்கு மேலாகியும் உரிமையாளர்கள் திரும்ப பெறவில்லை எனில் ஏலம் விடப்படுகிறது. இம்மாநகராட்சியில் ஜனவரி 2023 &nbsp;முதல் தற்போது வரை 1368 மாடுகளைப் பிடித்து கால்நடை உரிமையாளர்களிடம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உரிமை &nbsp;கோராத 68 கால்நடைகள் பொது ஏலம் விடப்பட்டுள்ளன. &nbsp;இனிவரும் காலங்களில் இம்மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொது சுகாதா ரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் கால்நடை உரிமை யாளர்களுக்கு அபராதமும், காவல்துறை மூலம் கால்நடை உரிமைதாரர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணை யர் மதுபாலன் தெரிவித்துள்ளார். சமூக நீதிக்கான தந்தை பெரியார் &nbsp;விருது பெற விண்ணப்பிக்கலாம் திருச்சிராப்பள்ளி, டிச.3 - சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக &ldquo;சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது&rdquo; 1995 ஆம் ஆண்டு &nbsp;முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரி யார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000 விருது தொகை யும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப் படுகிறது. இவ்விருதாளர் முதலமைச்சரால் தேர்வு செய்யப் படுகிறார். 2025 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் &ldquo;சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது&rdquo; வழங்குவதற்கு உரிய &nbsp;விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப் படுகிறது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்க ளின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப் பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனை கள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத் தினை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கலாம். தங்களது விண்ணப்பம், சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணி கள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 2025 ஆம் ஆண்டிற்கு சமூக நீதிக் கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள்: &nbsp;18.12.2025 என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் சரவணன் &nbsp;தெரிவித்துள்ளார்.</p> <p>தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை &nbsp;சூழ்ந்த மழைநீர் மயிலாடுதுறை, டிச.3 - மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கனமழையால் உலக புகழ்பெற்ற தரங்கம்பாடியில் சுற்றுலா விரும்பிகளின் வருகை முற்றிலுமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. 405 ஆண்டுகள் பழமையான டேனிஷ் கோட்டையின் எதிர்புறம் உள்ள விளையாட்டு பொழுதுபோக்கு திடலை மழைநீர் சூழ்ந்துள்ளது. பிஎல்ஏ-2 முகவர்கள் கூட்டம் பாபநாசம், டிச.3 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை &nbsp;பேரூர் திமுக அலுவலகத்தில் பிஎல்ஏ-2 முகவர்கள் கூட்டம் நடந்தது. இதில் பேரூர் செயலர் வழக்கறிஞர் துளசி அய்யா, மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவு துணை &nbsp;அமைப்பாளர் பக்கீர்மைதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். &nbsp;எஸ்ஐஆர் பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, சிறப் பாக பணியாற்றிய பிஎல்ஏ 2 முகவர்களுக்கு பாராட்டுத் தெரி விக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.