திருச்சி விரைவு செய்திகள்
12 Nov 2025, 3:20 pm

மிதிவண்டி கோர்க்கும் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர், நவ.12 - தஞ்சாவூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலமாக, 2025-26 ஆம் ஆண்டிற்கு அரசு, அரசு நிதியுதவி மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளி களில் மேல்நிலைக் கல்வி 11 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட் டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர வகுப்பைச் சாரந்த மாணவ-மாணவியருக்கு விலை யில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. மிதிவண்டிகள் கோர்க்கும் பணிக்கு 10 ஆம் வகுப்பு படித்த (தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத) ஆண்கள், ஐடிஐ படித்த ஆண்கள் மற்றும் ஏற்கனவே மிதிவண்டிகள் கோர்க்கும் பணி செய்தவர்கள் இப்பணிக்கு 15.11.2025-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சிய ரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளு மாறு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரி வித்துள்ளார்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது

தஞ்சாவூர், நவ.12 - திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் பி.பிரதீப் கண்ணன் (24). கூலித் தொழிலாளியான இவர் தஞ்சை அருகே நடந்த ஒரு கோவில் விழாவிற்காக தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அதேபோல் தஞ்சை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி யும் அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார். சிறுமியும், பிரதீப் கண்ணனும் உறவி னர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பிரதீப் கண்ணன் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி இதுகுறித்து தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் வல்லம் காவல் ஆய் வாளர் முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் பிரதீப் கண்ணனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த சிறுமியை பிரதீப் கண்ணன் பாலியல் வன்கொடுமை செய்தது உண்மை என்று தெரிய வந்தது. இதையடுத்து, வல்லம் காவல் ஆய்வாளர் முத்துக் குமார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து பிரதீப் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

மல்லிப்பட்டினம் மக்களின் கோரிக்கை நிறைவேற்றம்

தஞ்சாவூர், நவ.12 - தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ஆண்டிக்காடு ஊராட்சி, மல்லிப்பட்டினம் காசிம் அப்பா கிழக்கு, மேற்கு தெருவிற்கு வடிகால் வசதியுடன் கூடிய, சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ரூ.50 லட்சம் மதிப் பீட்டில் அமைக்கப்படுகிறது. இதற்கான பணியை பேராவூரணி சட்டமன்ற உறுப்பி னர் நா.அசோக்குமார் புதன்கிழமை துவக்கி வைத்தார். சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், நாகேந்திரன், திமுக சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர் எஸ்.ஞானப்பிரகாசம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள், கிராம மக்கள், முஸ்லிம் ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர். இப்பகுதியில், பல வருடங்களாக மழைக்காலங் களில், வடிய வழியின்றி மழைநீர் தேங்கி நின்றது. மேலும், சாலை சேதமடைந்த நிலையில் இருந்தது. இந்நிலையில், வடிகால் வசதியுடன் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கியிருப்பதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தீக்கதிர் செய்தி எதிரொலி

காம்பவுண்ட் சுவர் கட்டும் பணி துவக்கம்

பாபநாசம், நவ.12 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில், கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் பள்ளியின் விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தின் முன்பக்க காம்ப வுண்ட் சுவரின் ஒரு பகுதி கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இடிந்து விழுந்ததால், கம்பி வேலி போடப்பட்டிருந் தது. இதுகுறித்து தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. தற்போது இந்த விளையாட்டு மைதானத்தின் முன்பக்க காம்பவுண்ட் சுவரை புதிதாக கட்டுவதற்கான பணி நடந்து வருகிறது. செய்தி வெளியிட்ட தீக்கதிர் நாளிதழுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.