முந்தய பக்கம்

முடியும் உன்னால் நடைபோடு!

7 Feb 2026, 1:22 pm
முடியும் உன்னால் நடைபோடு!
<p><strong>முடியும் உன்னால் நடைபோடு!</strong></p> <p>சின்னப் பாப்பா தேனமுதே! சிரிக்கும் முல்லைப் பூச்சரமே! குன்றாத் தமிழே நீ பாடு! குயிலும் கேட்கும் களிப்போடு! &nbsp;வண்ணத் தமிழை வளர்ப்பாயே! வானை அதனுள் அடைப்பாயே! எண்ணம் இனிக்க நீ பாடு ! ஏழை வாழ வழிதேடு! &nbsp;குணத்தில் மலராய் இருப்பாயே! குத்தும் முள்ளை முறிப்பாயே! மணக்க மணக்க நீ பாடு ! மண்ணைக் காப்பாய் விழிப்போடு! &nbsp; மரத்தின் நிழலைக் கொடுப்பவளே மதிபோல் வெளிச்சம் தருபவளே! அறத்தைப் போற்றி நீ பாடு ! அன்பே வாழ்க்கை நிலைப்பாடு. &nbsp;எண்ணம் வானாய் விரியட்டும்! இன்னல் யாவும் எரியட்டும்! கண்ணே! மணியே நீ பாடு! கடமை ஆற்றாய் உயிர்ப்போடு! &nbsp;வெற்றி வாழ்க்கை இலக்காகும் வீழ்ந்தால் எழுதல் இனிப்பாகும் முற்றும் உணர்ந்தே நீ பாடு ! முடியும் உன்னால் நடைபோடு!</p>
Share
FacebookXWhatsAppTelegram