தீக்கதிர் உலக செய்திகள்
17 Jun 2026, 8:36 pm

ஊழல் குற்றச்சாட்டு : ராஜபக்ச மகன் கைது

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் ஊழல் தடுப்பு ஆணையத்தால் ஜூன் 17 புதனன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு அதிகாரிகளின் முன்னிலையில் ஆஜராகுமாறு ஆணையம் அனுப்பியிருந்த சம்மனுக்குப் பதிலளிக்கும் வகையில், லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணையத்தில் யோஷித ஆஜராகியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை திறப்பு : நேட்டோ தலைவர் பாராட்டு

மேற்கு ஆசியாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்கா - ஈரான் இடையேயான ஒப்பந்தத்தை நேட்டோ அமைப்பின் தலைவர் மார்க் ரூட்டே பாராட்டியுள்ளார். மேலும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது “மிகப்பெரிய முன்னேற்றமாக” இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது , “ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் சுதந்திரமாகச் செல்வது மீண்டும் நடைபெறுவது ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாக இருக்கும். பல நேட்டோ நட்பு நாடுகள் இதற்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

மீண்டும் பொருளாதாரத் தடை : ரஷ்யாவுக்கு டிரம்ப் மிரட்டல்

ரஷ்யா மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதிக்கக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்ட பின் ரஷ்யா மீதான கட்டுப்பாடுகள் தடைகள் மீண்டும் நடைமுறைக்கு வரலாம் எனவும் கூறியுள்ளார். ஈரான் மீதான போருக்குப் பிறகு உலகளவில் சர்வதேச கச்சா எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டது. இதனை சமாளிக்க கடந்த மார்ச் மாதம் ஏற்கெனவே கப்பல்களில் ஏற்றப்பட்டு கடலில் முடங்கியிருந்த ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை உலக நாடுகள் வாங்க 30 நாள் தளர்வை அமெரிக்கா வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.