தீக்கதிர் முக்கிய செய்திகள்
6 Oct 2026, 9:27 pm

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சமூக செயற்பாட்டாளர் யோகேந்திர யாதவ்

ஒரு காலத்தில் இந்தியாவின் தேர்தல் ஆணையத்தை உலகத்திற்கே நாம் முன்மாதிரியாக எடுத்துக்காட்டி வந்தோம். ஆனால் இன்று, அதே தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையை உலகிற்கு முன்பாகக் கேள்விக்குள்ளாக்குவது வெட்கக்கேடாக உள்ளது. இந்திய ஜனநாயகத் தேர்தல்களின் மிக இருண்ட காலங்களில் இதுவும் ஒன்றாகும்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி

பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட தில்லி உதவி ஆணையர் விவேக் பகத், கூடுதல் துணை ஆணையராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்தியாவில் மட்டுமே குற்றச்சாட்டிற்கு உள்ளானால் பதவி உயர்வு கிடைக்கும்; மாலையிட்டு வரவேற்பார்கள். நாடு செல்லும் பாதை செல்லும் சரியல்ல.

திரைக் கலைஞர் ரம்யா

மோடி பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வர மாட்டார். அவரது கூட்டாளி போல செயல்படும் ஞானேஷ் குமாரோ, போலி வாக்காளர்கள் குறித்து பத்திரிகையாளர் கேள்வி கேட்டால் பதில் அளிக்காமல், வேறு ஏதோ பேசுகிறார். மோடி, ஞானேஷ் குமார் இருவரும் மக்களின் கவனத்தை திருப்பவே முயல்கின்றனர்.

பிஜு ஜனதா தளம்

தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமல்ல, மோடி அரசுக்கும் முடிவு காலம் நெருங்கிவிட்டது. இனி என்ன செய்தாலும் மோடி, அமித் ஷா, ஞானேஷ் குமார் நாட்டு மக்களிடம் தப்பிக்க முடியாது. மக்கள் எழுச்சி தீவிரமடைந்து வருவது பாஜக - ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு இன்னும் புரியவில்லை.