பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான முதல்வர் ஒய்எம்சிஏ கல்லூரியில் மறு நியமனம் விசாரிக்க குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்தல்
8 Jul 2026, 11:01 pm

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான முதல்வர் ஒய்எம்சிஏ கல்லூரியில் மறு நியமனம் விசாரிக்க குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 8- ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரியின் முதல்வராக ஜார்ஜ் ஆபிர காம் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட தற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜார்ஜ் ஆபிரகாம் மீது 2012-ஆம் ஆண்டின் போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இத்தகைய சூழலில், அவர் கடந்த மே 19-ஆம் தேதி மீண்டும் கல்லூரியின் முதல்வராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

நிறுவனத்தின் கவலைகள்

இந்த மறு நியமனம் குறித்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமை கண் காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலியல் குற்றச்சாட் டுக்கு ஆளான ஒருவரை மீண்டும் பதவி யில் அமர்த்துவது, பெண் மாணவர் களின் பாதுகாப்பிற்கும், கல்வி உரிமை யிற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மேலும், இது போன்ற சம்பவங் கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையைச் சிதைக்கின்றன” என்று எச்சரித்துள் ளது.

கோரிக்கைகள்

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசும், மாநில மகளிர் ஆணையமும் தலையிட வேண்டும் என அந்தக் கண் காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. பாலியல் குற்றச்சாட்டு மற்றும் போக்சோ வழக்கு நிலுவையில் இருக்கும்போது, எதன் அடிப்படையில் அவர் மீண்டும் முதல்வராகப் பணியமர்த்தப்பட்டார் என்பது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் விரிவான அறிக்கை பெற வேண்டும். இந்த நியமனம் குறித்து மாநில மகளிர் ஆணையம் முறையான விசா ரணை நடத்த வேண்டும். கல்வி நிறுவனத்தில் மாணவி களின் பாதுகாப்பை உறுதி செய்ய வும், பாதிக்கப்பட்டவர்களின் பாது காப்பிற்கான நடவடிக்கைகளைச் சரி யாகச் செயல்படுத்தவும் கண்காணிக்க வேண்டும்.