தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

2 hours before
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

ஏற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்

சேலம், ஆக.16-வார இறுதி நாளான ஞாயிறன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், ஏற்காட்டில் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு ஞாயிறன்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை பார்வையிட்டு, இயற்கை அழகை ரசித்தனர். குறிப்பாக, படகு இல்லத்தில் நீண்ட நேரம் காத்திருந்துசவாரி மேற்கொண்டனர். சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அதிகளவில் ஏற்காடு நோக்கி வந்ததால், மலைப்பாதை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

சேகோ ஆலையால் நிலத்தடி நீர் மாசு

ஈரோடு, ஆக.16-ஈரோடு மாவட்டம், குறிச்சி ஊராட்சியில் நிலத்தடி நீர் மாசுபட்டு கடுமையான குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட ஜல் ஜீவன் திட்டத்தினாலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படவில்லை. இந்நிலையில், சனியன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஜல்ஜீவன் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டறிந்து காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பூனாட்சி அருகே செயல்படும் சேகோ ஆலையினால் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத அளவிற்கு மாசடைந்துள்ளது. எனவே, இந்த ஆலையை மூடவும், குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணமாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஓணம் சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம், ஆக.16-ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், பெங்களூரு - கண்ணூர் இடையே கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆக.20 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு பெங்களூரு பாளையத்தில் இருந்து புறப்படும் பெங்களூரு பாளையம் - கண்ணூர் சிறப்பு ரயில் (எண்: 06567), மறுநாள் மதியம் 12.50 மணிக்கு கண்ணூர் சென்றடையும். மறுமார்க்கத்தில், கண்ணூர் - பெங்களூரு பாளையம் சிறப்பு ரயில் (எண்: 06568) ஆக.21 ஆம் தேதி மாலை 4.10 மணிக்கு கண்ணூரிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.00 மணிக்கு பெங்களூரு பாளையம் சென்றடையும். இவ்விரு ரயில்களும் கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, ஷோரனூர், திரூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.