தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்: போதிய காவலர்கள் இல்லையென குற்றச்சாட்டு

17 May 2026, 11:07 pm
சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்: போதிய காவலர்கள் இல்லையென குற்றச்சாட்டு
<p><strong>சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்: போதிய காவலர்கள் இல்லையென குற்றச்சாட்டு</strong></p><p>​​​​​​​சேலம், மே 17- கோடை சீசன் காரணமாக ஏற் காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முக்கிய சாலை களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போதிய காவலர் கள் இல்லையென சுற்றுலாப் பய ணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சேலம் மாவட்டம், ஏற்காட்டில் தற்போது கோடை சீசன் களைகட்டி யுள்ளது. கடந்த பத்து நாட்களுக் கும் மேலாக தமிழகத்தின் பல் வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும் பத்துடன் ஏற்காட்டிற்கு வந்து செல் கின்றனர். இந்நிலையில், ஞாயி றன்று விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட அதிகமான சுற்று லாப் பயணிகள் திரண்டனர். இதன் காரணமாக ஏற்காடு ஏரி, அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்க ளுக்கு செல்லும் சாலைகளில் வாக னங்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தன. பல இடங்களில் வாகனங்கள் நகர முடியாமல் சுற்று லாப் பயணிகள் அவதியடைந்த னர். முக்கிய சந்திப்புகள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் அருகே போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போதிய காவலர்கள் பணியில் இல்லை என சுற்றுலாப் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொ டர்பாக சுற்றுலாப் பயணி ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட வீடியோ, வைராலாகி வருகிறது. ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் காவலர்களை நியமித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலாப் பயணி களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.