ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து பாதிப்பு
3 hours before

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து பாதிப்பு

சேலம், அக்.4-ஏற்காட்டில் ஞாயிறன்று விடுமுறை தினத்தையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், முக்கியசாலைகளில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் தற்போது மாலை நேரங்களில் நல்ல மழை பெய்து வருவதால், அங்கு காலநிலை மிகவும் குளுமையாக மாறியுள்ளது. இதனால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டுக்கு வந்தனர். ஏற்காட்டுக்குவந்த சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள முக்கிய சுற்றுலா இடங்களான லேடீஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடாபாயிண்ட், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, சேர்வராயன் குகைக் கோயில் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்துமகிழ்ந்தனர். குறிப்பாக, ஏற்காடு படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி மேற்கொண்டனர்.

படகு சவாரியின்போது ஏரியைச் சுற்றியுள்ள இயற்கைக் காட்சிகளை ரசித்து மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால், சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேநேரத்தில், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அதிகளவில் வந்ததால் ஏற்காடு மலைப்பாதை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.