தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஏற்காடு கோடை விழாவிற்கான முன்னேற்பாடு பணி தீவிரம்

9 May 2026, 2:00 am
ஏற்காடு கோடை விழாவிற்கான முன்னேற்பாடு பணி தீவிரம்
<p><strong>ஏற்காடு கோடை விழாவிற்கான முன்னேற்பாடு பணி தீவிரம்</strong></p><p>சேலம், மே 8- ஏற்காட்டில் 49 ஆவது கோடை விழா நடைபெறவுள்ளதை முன் னிட்டு, மேற்கொள்ளப்பட வேண் டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் அ.அருண் தம்பு ராஜ் ஆய்வு செய்தார். சுற்றுலாப் பயணிகளை வெகு வாக கவரும் இடமாக சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு திகழ்ந்து வருகிறது. ஆண்டுதோ றும் கோடை காலத்தில் ஏற்காடு கோடை விழா நடத்தப்படுவதால் பள்ளிக் குழந்தைகள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பொதுமக் கள் கோடை காலத்தை கொண்டாட ஏற்காடு மலைப்பகுதிக்கு வருகை தருகின்றனர். குறிப்பாக, ஏற்காடு, அண்ணா பூங்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் லட்சக் கணக்கான மலர்களைக் கொண்டு மலர்க்காட்சியும், காய்கறி கண் காட்சி மற்றும் பழக்கண்காட்சிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இக் கோடை விழாவில் நாள்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இன் னிசை நிகழ்ச்சிகள், செல்லப்பிரா ணிகள் கண்காட்சி, படகுப் போட்டி கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி களும் ஏற்பாடு செய்யப்படவுள் ளன. ஏற்காட்டில் சுற்றுலாப் பயணி கள் வசதிக்காக மேற்கொள்ளப் பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ் வெள்ளியன்று ஆய்வு செய்தார். படகு இல்லம், அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா உள் ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, போதிய அளவிலான குடிநீர் வசதி கள், வாகன நிறுத்துமிடங்கள், குப்பை தொட்டிகள், கழிப்பிட வசதி கள் முறையாக அமைக்கபட்டுள் ளதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஏற்காடு மலைப்பாதையில் சாலை பாதுகாப்புகள் குறித்து சுற்றுலாப் பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், போக்கு வரத்து துறையின் சார்பில் விழிப்பு ணர்வு பதாகைகள், சுவர் விளம்ப ரங்கள் உள்ளிட்ட பல்வேறு விழிப்பு ணர்வு நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள் ளது. இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) வாணி ஈஸ்வரி, தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் க. மஞ்சுளா உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.