சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த நாய்கள் கண்காட்சி
24 May 2026, 11:07 pm
<p><strong>சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த நாய்கள் கண்காட்சி</strong></p><p>சேலம், மே 24- ஏற்காடு கோடை விழாவில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி மற்றும் போலீஸ் நாய்களின் சாகசங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நடைபெற்று வரும் 49 ஆவது கோடை விழாவின் முக்கிய நிகழ்வாக ஞாயிறன்று நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. கால் நடை பராமரிப்புத் துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானனோர் தங்களது செல்லப்பிரா ணிகளுடன் கலந்து கொண்டனர். இதில் லாப்ராடர் ரெட்ரீவர், கோல்டன் ரெட்ரீவர், ஜெர்மன் ஷெப்பர்ட், டாபர்மேன், சைபீரியன் ஹஸ்கி, பக், ஒயிட் டெரியர், கிரேட் டேன் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு இன நாய்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. வண்ண மயமான அலங்காரங்களுடன் அணிவகுத்து வந்த நாய்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் ரசித்த துடன், புகைப்படங்கள் மற்றும் செல்பிகளும் எடுத் துக் கொண்டனர். கண்காட்சியின் சிறப்பு அம்சமாக சேலம் மாநகர போலீஸ், ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் மத்திய சிறைச்சாலையில் பணிபுரியும் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடை பெற்றன. வெடிபொருட்களை கண்டறிதல், குற்றவா ளிகளை மோப்பம் பிடித்து அடையாளம் காணுதல், தொலைவில் மறைத்து வைக்கப்பட்ட பொருட்களை தேடி எடுத்தல் போன்ற திறமைகளை போலீஸ் நாய் கள் துல்லியமாக செய்து காட்டின. மேலும் போலீ சாரின் கட்டளைக்கு இணங்க அமருதல், கை கொடுத் தல், சத்தம் எழுப்புதல் உள்ளிட்ட செயல்களும் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், நாய்களின் சுறுசுறுப்பு, உடல்நலம் மற்றும் கட்டளைகளுக்கு கீழ்ப்படிதல் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த நாய்கள் தேர்வு செய்யப்பட்டன. வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு கோப்பைகள் மற் றும் பரிசுகள் வழங்கப்பட்டன. ‘கோடை விழாவிற்கு வந்த எங்களுக்கு இந்த நாய் கண்காட்சி கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது. குறிப்பாக போலீஸ் நாய்க ளின் சாகசங்கள் மிகவும் வியப்பாக இருந்தது’ என சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சி யில் கால்நடைத்துறை உதவி இயக்குநர்கள் செல்வ குமார், சுமதி, நவநீதன், வாசுதேவன், லதா, முதன்மை மருத்துவர் விஜயகுமார், கால்நடை மருத் துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
