தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பழங்குடி மாணவர்களின் உயர்கல்வியை உறுதிபடுத்திடுக

13 Jul 2026, 12:12 am
பழங்குடி மாணவர்களின் உயர்கல்வியை உறுதிபடுத்திடுக
<p><strong>பழங்குடி மாணவர்களின் உயர்கல்வியை உறுதிபடுத்திடுக</strong></p><p>சேலம், ஜூலை 12- ஏற்காடு சட்டமன்றத் தொகுதி யில் உடனடியாக அரசு கலை மற் றும் அறிவியல் கல்லூரி அமைத்து, பழங்குடி உள்ளிட்ட மாணவர்க ளின் உயர்கல்வியை உறுதிபடுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஏற்காடு சட்ட மன்றத் தொகுதி என்பது மலை வாழ் பழங்குடியின மக்களும், கிரா மப்புற ஏழை எளிய மக்களும் அதிக ளவில் வாழும், கல்வி மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய பகுதியாகும். இத்தொகுதியில் ஆண்டுதோறும் சுமார் 2,500 முதல் 3,000 மாணவர் கள் வரை 12 ஆம் வகுப்பு முடித்து, உயர்கல்விக்கு தகுதி பெறுகின்ற னர். ஆனால், இவர்களில் கணிசமா னோர் உயர்கல்வியை தொடர முடி யாமல் பொருளாதார நெருக்கடி, போக்குவரத்து சிரமம் மற்றும் அரு கில் அரசு கல்லூரி இல்லாத நிலை காரணமாக கல்வியை இடைநிறுத் தும் சூழலுக்கு தள்ளப்படுகின்ற னர். ஏற்காடு சட்டமன்றத் தொகுதி யில் 50க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின் றன. அவற்றில் பெரும்பாலானவை அரசுப்பள்ளிகளாக இருந்து, ஏழை, எளிய மற்றும் பழங்குடியின மாண வர்களின் கல்விக்கு முக்கிய ஆதார மாக உள்ளன. இருப்பினும், பள்ளிக்கல்வியை முடித்த பிறகு மாணவர்கள் கல்லூரியில் சேர வேண்டுமெனில் சேலம், மேட்டூர், ஆத்தூர் உள்ளிட்ட சமவெளிப் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது; அல்லது வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டி யுள்ளது. இந்த பயணம் மாணவர்களின் குடும்பங்களுக்கு கூடுதல் செல வையும், நேர இழப்பையும் ஏற் படுத்துகிறது. குறிப்பாக பழங்குடி யின மாணவர்கள் உயர்கல்வியை தொடருவதில் இது மிகப்பெரிய தடையாக மாறியுள்ளது. தமிழ்நாடு உயர்கல்விச் சேர்க்கை விகிதத்தில் நாட்டிலேயே முன்னணியில் இருந்தாலும், ஏற்காடு போன்ற மலை மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவது அரசின் முதன்மை பொறுப்பா கும். கல்வி என்பது ஒவ்வொரு மாணவரின் அடிப்படை உரிமை; அது வசதியுள்ளோருக்கான வாய்ப்பாக மட்டுமே இருக்கக் கூடாது. எனவே, ஏற்காட்டில் உட னடியாக அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியை நிறுவ தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும், வருகின்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அதற் கான அறிவிப்பை வெளியிட வேண் டும் என்றும் வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஞாயிறன்று ஏற்காடு ஒண்டிக்கடையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் டார்வின் மார்க்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் தில், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஸ்டாலின், காவியா, மாவட்டச் செயலாளர் சே.பவித்ரன், மாவட்ட இணைச்செயலாளர் கோகுல், முள் னாள் தலைவர் நேரு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னர். மாவட்ட நிர்வாகிகள் ஜீவா, ரிஷி, செல்வம், ரேணுகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.