தொடர் மின்வெட்டு: ஏற்காட்டில் அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
9 Jul 2026, 9:53 pm
<p><strong>தொடர் மின்வெட்டு: ஏற்காட்டில் அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்</strong></p><p>சேலம், ஜூலை 9- ஏற்காட்டில் தொடர் மின்வெட்டு நிலவி வருவதால் மக்க ளின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கண்டித்து அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சேலம் மாவட்டம், ஏற்காட்டில் தொடர்ந்து ஒரு மாத காலமாக மின்வெட்டு உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மிக முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ள ஏற்காட்டில் அதிகமாக தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் உள்ளதால் அத்தியா வசிய தேவையான மின்சாரம் இல்லாததால் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 70-க்கும் மேற்பட்ட கிராமங் கள் இருளில் மூழ்கியுள்ள நிலை, தொடர்ந்து நீடித்து வருகி றது. எனவே தமிழக அரசு மின்சார வாரியம் உடனடியாக ஏற் காட்டில் நிலவி வரும் தொடர் மின்வெட்டை சரி செய்ய வேண்டும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியு றுத்தி ஏற்காடு வாழ்வுரிமை கூட்டு இயக்கத்தினர் புதனன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சிபிஎம் ஏற்காடு ஒன்றியச் செயலாளர் நேரு, அதிமுக ஒன்றியச் செயலாளர் அண்ணாதுரை, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சித்ரா, திமுக ஒன்றியச் செயலாளர் ராஜா, தொழிற்சங்க தலைவர் நல்லமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.</p>
