தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஏற்காடு: மலர்க்காட்சி மே 22 ஆம் தேதி துவக்கம்

20 May 2026, 12:22 am
ஏற்காடு: மலர்க்காட்சி மே 22 ஆம் தேதி துவக்கம்
<p><strong>ஏற்காடு: மலர்க்காட்சி மே 22 ஆம் தேதி துவக்கம்</strong></p><p>சேலம், மே 19- சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் 49 ஆவது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி வருகின்ற 22.05.2026 முதல் 28.05.2026 வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்று லாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுத்தோறும் ஏற்காடு கோடைவிழா மற்றும் மலர்க்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு 49 ஆவது ஏற்காடு கோடை விழா மற் றும் மலர் கண்காட்சி வருகின்ற 22.05.2026 ஆம் தேதியன்று (வெள் ளிக்கிழமை) தொடங்கி 28.05.2026 ஆம் தேதி (வியாழக்கிழமை) வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது. சுற்று லாப் பயணிகள், பொதுமக்கள், குழந் தைகள் உள்ளிட்ட அனைத்துத் தரப் பினரையும் மகிழ்விக்கும் வகையில் இக்கோடை விழா ஏற்பாடு செய்யப் படவுள்ளது. இந்த ஆண்டு நடத்தப்படவுள்ள ஏற்காடு கோடை விழா சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் மலர்க்காட்சி, பழக்கண்காட்சி மற்றும் காய்கறிக் கண்காட்சிகளும் அமைக்கப்பட வுள்ளது. குறிப்பாக, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் வகையில் வண்ண மலர்களைக் கொண்டு பல்வேறு வடிவமைப்புகளும், வண்ணமலர் தொட்டிகளைக் கொண்டு மலர் கண்காட்சிகளும் அமைக்கப்பட வுள்ளன. மேலும், ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார் பில் ஆரோக்கியமான குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி, பல்வேறு விளை யாட்டு போட்டிகள் நடத்தப்படவுள் ளது. கால்நடை பராமரிப்புத்துறை யின் சார்பில் செல்லப் பிராணிகள் (நாய்கள்) கண்காட்சி, கலைப்பண் பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத் துறை ஒருங்கிணைந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள் ளது, இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.