ஏற்காட்டில் 49ஆவது கோடை விழா, மலர்க்காட்சி கோலாகலத் தொடக்கம்
22 May 2026, 9:16 pm

ஏற்காட்டில் 49ஆவது கோடை விழா, மலர்க்காட்சி கோலாகலத் தொடக்கம்

சேலம், மே 22 – சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஏற்காட்டில், சுற்று லாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கோடை விழா, மலர்க்காட்சி வெள்ளியன்று துவங்கியது.

90,000 ரோஜா இந்த கோடை விழாவையொட்டி, சுற்றுலாப் பயணிகள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில், தோட்டக்கலைத்துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் மொத்தம் 2,07,000 வண்ண ரோஜா மலர்களைக் கொண்டு பல்வேறு தத்ரூபமான வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உலகிற்கு உணவளிப்போம் என்ற உன்னதக் கருத்தினை மைய மாகக் கொண்டு, உழவு மாடுகளு டன் விவசாயி உழவு செய்தல், கன்றுகுட்டியுடன் கறவை மாடு, ஆடு, சேவல், கோழி, முயல், வாத்து, தேனீக்கள் மற்றும் பண்ணை வீடு உள்ளிட்ட ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த பண்ணைய வடிவம் 90,000 ரோஜா மலர்களால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகள் ரசிக்கும் பொருட்டு 45,000 ரோஜா மலர்களில் பிரம்மாண்ட டெடி பியர், 12,000 மலர்களில் கார்ட்டூன் கதாபாத்திரங் களான புளூட்டோ, கூபி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. 10,000 ரோஜாக்களில் கற்பனை தேவதை உருவமும், 15,000 ரோஜாக்களில் பரதநாட்டிய மங்கையர் வடிவமும் உருவாக்கப்பட்டுள்ளன.

இதே போன்று, இரட்டை இதயம், இறக்கை இதயம், மலர்களில் பிறை நிலா மற்றும் மான் போன்ற கலை வடி வங்கள் மலர்களால் வடிவமைக் கப்பட்டு சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கிறது. இதுதவிர, பூங்காவிற்குள் டேலியா, ஜினியா, சால்வியா, செவ்வந்தி, சாமந்தி உள்ளிட்ட 30,000-க்கும் மேற்பட்ட பல்வேறு வண்ண மலர்களைக் கொண்ட அலங்கார பூந்தொட்டிகளும் அணி வகுத்து நிற்கின்றன.

இரவு நேரங் களில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் பூங்கா முழுவதும் வண்ண மயமான அலங்கார மின்விளக்கு தோரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. வெள்ளியன்று துவங்கிய இவ்விழா 7 நாட்களிலும் தினசரி மாலை வேளைகளில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், இன்னிசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடை பெறவுள்ளன.

மேலும், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் செல்லப்பிராணிகள் கண்காட்சியும், இளைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக விளையாட்டுத் துறையின் சார்பில் பல்வேறு விறுவிறுப்பான விளையாட்டுப் போட்டிகளும் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. 1.50 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கடந்த ஆண்டில் சுமார் 1,16,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்த நிலையில், கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும், புதிய வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளதாலும் இந்த ஆண்டு சுமார் 1,50,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவார்கள் என எதிர்பா ர்க்கப்படுகிறது.

குளிர்ச்சியான சூழலை அனுபவிக்கவும், மலர்க் கண்காட்சியைக் கண்டு ரசிக்கவும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் திரண்டு வருமாறு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இத்துவக்க விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரவிக் குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வாணி ஈஸ்வரி, சேலம் வருவாய் கோட்டாட்சியர் கே.உதயகுமார், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் க. மஞ்சுளா மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நடப்பு ஆண்டின் 49ஆவது ஏற்காடு கோடை விழா, மலர்க்காட்சியினை சேலம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில், ஏற்காடு சட்டமன்ற உறுப்பி னர் ப.உஷாராணி, மேற்கு சட்டமன்ற உறுப்பினர் சோ.லட்சுமணன், வீர பாண்டி சட்டமன்ற உறுப்பினர் மே.ச. பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஏற்காடு கோடை விழா மே 28ஆம் தேதி (வியாழக் கிழமை) வரை 7 நாட்களுக்கு நடைபெறும்.