ஏலகிரி மலையில் பொய் வழக்கு பதிவு செய்த அதிகாரி மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் புகார்
56 minutes before
<p><strong>ஏலகிரி மலையில் பொய் வழக்கு பதிவு செய்த அதிகாரி மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் புகார்</strong></p><p>திருப்பத்தூர்,அக்.9-திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை அத்தனாவூர் ஊராட்சிக்குட்பட்ட முத்தா னூர் பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு மலைவாழ் மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ்பெற வேண்டும் எனவும்,மலையாளிகள் காலங்கால மாக அனுபவித்து வரும் நிலங்களை அபகரிக்கும் நோக்கில் ஈடுபட்ட திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பஹீம் மற்றும் வேலு ஆகியோர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.</p><p>பழங்குடி அல்லாதவர் மலை கிராமங்களில் நிலம் வாங்கவோ விற்கவோகூடாது என்ற அரசா ணையை மீறியதுடன், நில அபகரிப்புக்குத் துணையாகச் செயல்பட்ட வரு வாய்த்துறை மற்றும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், பழங்குடி மக்கள் அனுபவத்தில் உள்ள நிலங்க ளுக்குப் பட்டா வழங்க வேண்டும் என்றும் வலி யுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டில்லி பாபு, ஏலகிரி கமிட்டி தலைவர் மனோகர், ஜவ்வாது மலை வாழ் மக்கள் சங்கத் தலை வர் ஜெயராமன் மற்றும் ஏலகிரி மலைவாழ் மக்கள் ஆகியோர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் நல்ல சிவனிடம் நேரில் புகார் மனு அளித்தனர்.</p>
