யாரு செல்லம் நீ! - பழனி.சோ.முத்துமாணிக்கம்.
9 May 2026, 2:26 pm

யாரு செல்லம் நீ! - பழனி.சோ.முத்துமாணிக்கம்.

சிறுமலர் நடுநிலைப்பள்ளி அந்த மாலைவேளையில் மஞ்சள் குளித்தபடி மாணவக் குயில்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தில் மூழ்கியிருந்தது.

எல்லா வகுப்புகளுக்கும் அந்த நாளின் கடைசி வகுப்பு கதைசொல்லலாகவோ, உடற்பயிற்சி வகுப்பாகவோ இருக்கும்.

எட்டாம் வகுப்பு ‘ அ ‘ பிரிவில் எழுந்த சிரிப்பலை நாணயப்பையை உதறியதுபோல் கேட்டது. ஆசிரியர் செவ்வந்தியின் வகுப்பென்றால் மாணவர்க்குக் கொண்டாட்டம்தான்.அவர் பாடம் நடத்தினால் இசைச் சொற்பொழிவு கேட்பதுபோல் இருக்கும்.

திருக்குறள் நடத்தினால்கூட, அதையும் பாட்டாகவே பாடுவார். மாணவர்கள் வீட்டில் எப்படி நடந்து கொள்கிறார்கள் ? பெற்றோருடன் எப்படிப் பழகுகிறார்கள் ?வீட்டுப் பாடங்களைத் தனியாகச் செய்கிறார்களா? மற்ற நண்பர்களுடன் கலந்து பேசி விளையாடுகிறார்களா ? என்று பலகோணங்களில் மாணவர்களைப் பற்றி ஆய்வதும் அவர்களுக்கு வழிகாட்டுவதும் செவ்வந்திக்கு மிகவும் பிடிக்கும். ‘

செல்லங்களா ..கொஞ்சம் சிரிக்கறத நிறுத்துங்க. நான் கேக்கறதுக்கு விடை சொல்லுங்க ‘.என்று செவ்வந்தி கூறியவுடன் வகுப்பு கப்சிப் என அமைதியானது. ‘ நம்ம வகுப்புல யார்யார் அம்மா செல்லம்? யார்யார் அப்பா செல்லம்?னு சொல்லணும்.

மணிமாறன், காவியன் ரெண்டுபேரும் வாங்க. அம்மா செல்லம்னு சொல்றவங்க பேரை மணிமாறன் எழுதட்டும்.

அப்பா செல்லம்னு சொல்றவங்க பேரைக் காவியன் எழுதட்டும். ‘

ஆசிரியர் சொல்லி முடித்தவுடன் இரண்டு மாணவர்களும் மற்ற மாணவர்களிடம் பேசிப் பட்டியலை எடுக்கத் தொடங்கினர். ’

பட்டியல் தயாரா ? வர்ற ஞாயிற்றுக்கிழமை அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்து உங்க அம்மா அப்பாகிட்டப் பேசலாம்னு இருக்கேன்.

என்ன நான் வரவா ? ‘ என்று ஆசிரியர் கேட்டவுடனே ஒட்டுமொத்த வகுப்பும் மகிழ்ச்சி ஆரவாரத்தால் கலகலப்பானது.

டீச்சர் எங்க வீட்டுக்கு வாங்க’ என்று எல்லோரும் அழைக்கத் தொடங்கினர். செவ்வந்தி ஆசிரியர்க்கும் மிக்க மகிழ்ச்சி.மாணவர்கள் தன்மேல் கொண்ட பாசத்தை எண்ணிப் பெருமிதம் கொண்டார். ’ அமைதி..அமைதி..இந்த வாரம் ரெண்டுபேர் வீட்டுக்கு வருவேன்.

காலையில ஒரு வீட்டுக்கும், மாலையில் ஒரு வீட்டுக்கும். எந்த வீட்டுக்குன்னு இப்பச் சொல்ல மாட்டேன்.எல்லாரும் தயாரா இருங்க.

சரியா?‘ என்ற ஆசிரியரைப் பார்த்து, ‘என்னாங்க டீச்சர், வருவதற்குமுன்னால சொன்னால் தானே நாங்க தயாரா இருக்க முடியும் ‘ என ஒரு மாணவன் சொல்ல, அதையே எல்லோரும் வழிமொழிய, மாலையில் கூடடைய வரும் பறவைகளின் கூச்சலில் அதிரும் ஆலமரமாக விளங்கியது வகுப்பு. ’டேய்..உங்க வீட்டுல எப்போம்போல இயல்பா இருங்கடா. நா

ன் வருவதற்கு முன்னால சொல்லீட்டு வர்றேன்.’ ஞாயிற்றுக்கிழமை வந்தது. எட்டாம் வகுப்பு, ‘அ’ பிரிவு மாணவர்கள் வீட்டில் ஒரே பரபரப்பு.

பெற்றோர்களுக்கு வியப்பு, என்னடா பையன் நல்ல பிள்ளையா வீடடங்கி இருக்கிறானே என்று. காலை மணி பத்து.

செவ்வந்தி ஆசிரியர் மணிமாறன் துணையோடு தன் வீட்டுக்கு வந்ததைப் பார்த்த அமுதனுக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை.

‘ வாங்க டீச்சர் வாங்க. வாடா மணிமாறா என்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றான். அம்மா அம்மா இங்க வாங்க.

யாரு வந்திருக்காங்க பாருங்க என்று கூவினான். ’ உக்காருங்க உக்காருங்க என்று சொன்னபடி நாற்காலிகளை எடுத்துப் போட்டான் அமுதன். ’ வாங்க டீச்சர் வாங்க..அமுதன் உங்களப் பத்திச் சொல்லிக்கிட்டே இருப்பான்.

நல்லா இருக்கீங்களா ? என்ன சாப்பிடுறீங்க ? சூடாவா? குளிர்ச்சியாவா?’ ’ரொம்ப மகிழ்ச்சீங்க..இப்பத்தான் காப்பி குடிச்சுட்டு வர்றோம்” உடனே இடைமறித்த அமுதன் ,’அம்மா டீச்சர் அப்பிடித்தேன் சொல்வாங்க. நீங்க பேசிக்கிட்டு இருங்க.

நான் போய் மோர் கொண்டு வர்றேன்.’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றான். செவ்வந்தி ஆசிரியருக்கு ஒரே வியப்பு.

‘ என்னங்க ? உங்கள உட்காரச் சொல்லிட்டு அவன் விருந்தாளிகளக் கவனிக்கிறான் ‘ என்றார். ’ அமுதன் என் செல்ல மகனுங்க.

எனக்கு வேலை அதிகமா இருக்கும்போது அவனா முன்வந்து வேலை செய்வான். சமையல்ல கூடஎனக்கு ஒத்தாசையா இருப்பானுங்க.

வீட்டைப் பெருக்கிறதுக்கும் உதவி செய்வான். தங்கமான பையனுங்க ‘ என்று சொல்லி முடிக்கும் முன் மூவருக்கும் மோர்கொண்டு வைத்தான் அமுதன்.

’ மிக்க நன்றீங்க.நாங்க புறப்படறோம்.அமுதன் வரட்டுமா ?’ என்று கூறி விடைபெற்றார் செவ்வந்தி.

மணிமாறனும் சிரித்தபடி அவரோடு சென்றான். சூரியன் ஒளிச் சிறகுகளைச் சுருட்டிக் கொண்டு மேற்குத் திசையில் இறங்கிக் கொண்டிருந்தான்.

’ என்ன மணிமாறா முகிலன் வீட்டுவரை போய்வரலாமா ?’ என்று கேட்ட ஆசிரியரைப் புன்னகையோடு பார்த்த மணிமாறன், “ என்னங்க டீச்சர் அடுத்த ஆராய்ச்சி அந்த வீட்டுலேங்களா ? “ என்று குறும்பாகக் கேட்டான்.

’ ஆராய்ச்சியெல்லாம் இல்லைடா. அடுத்த தெருவிலதான் முகிலன் வீடு இருக்கு.

வா முகிலன் என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்னு பாத்துட்டுப் போகலாம் “ என்ற செவ்வந்தியைப் பணிவோடு பின்தொடர்ந்தான் மணிமாறன், வகுப்பில் நானும் அம்மா செல்லம்தான் என்று முகிலன் ஆசிரியரிடம் சொன்னதை நினைவுகூர்ந்து.

அழைப்பு மணியை அடித்தவுடன் வெளியே வந்த முகிலனுக்கு ஒரே வியப்பு. ’ வாங்க வாங்க டீச்சர்.மணிமாறா .

என்ன ஒரே அதிசயமா இருக்கே.

உக்காருங்க நாற்காலீல ‘ என்று கூறிய முகிலன் ‘ அம்மா இங்க வாங்க..யாரு வந்திருக்காங்கன்னு பாரும்மா ‘ என அம்மாவை அழைத்தான்.

துவைத்துக் காயவைத்த முகிலனின் சீருடைகளை மடித்துவைத்துக் கொண்டிருந்த முகிலனின் அம்மா அவற்றை அப்படியே வைத்துவிட்டு வந்தார். ’ வாங்கம்மா .எப்பிடி இருக்கீங்க. மணி நல்லா இருக்கியா ? இருங்க குடிக்க ஏதாச்சும் கொண்டு வர்றேன்.

முகிலன் இவங்களோடு பேசிக்கிட்டு இருப்பா ‘ என்று உள்ளே சென்றாள் முகிலனின் அம்மா.

என்ன முகிலா உன்னோட சட்டை டவுசரை நீயே மடிச்சு வச்சுக்க மாட்டியா ? ’ டீச்சர் எனக்கு அம்மாதான் எல்லாம் செய்வாங்க. கு

டிக்கத் தண்ணி வேணும்னாலும் கேட்டவுடனே அவங்கதேன் கொண்டுவந்து குடுப்பாங்க.

அவ்வளவு பிரியம் எம்மேல ‘ என்ற முகிலனை மேலும் கீழுமாகப் பார்த்தார் செவ்வந்தி.

தேநீரோடு வந்த முகிலனின் அம்மா, ஆசிரியரிடம் முகிலன் பேசியதைக் கேட்டபடியே ,” குடிங்கம்மா..நீயும் குடீப்பா மணி” என்று மேசைமீது தேநீரை வைத்தாள். ’ ரொம்பச் செல்லமா வளத்துட்டேங்க முகிலனை. படிக்கற பையனுக்கு எதுக்குத் தொந்தரவுன்னு நானே மேப்போட்டு எல்லா வேலையையும் செஞ்சுருவேங்க.” என்றார் சிரித்துக்கொண்டே கேட்ட ஆசிரியர், “ அப்போ நான் பொறப்படறங்க .

முகிலன் வரட்டுமா “ என்று சொன்னபடி விடைபெற்றார். ‘நாளை சந்திக்கலாம்டா ‘ என்று முகிலனுக்குக் கையை ஆட்டிவிட்டுப் புறப்பட்டான் மணிமாறன்.

திங்கள் கிழமை மாலை .செவ்வந்தி ஆசிரியரின் வகுப்பு சிரிப்பொலியால் நிரம்பி வழிந்தது.

போன வகுப்பில எல்லார்கிட்டயும் ஒரு கேள்வி கேட்டேனே நெனவிருக்கா என்று கேட்டார்.

வகுப்பின் மூன்றாம் வரிசையில் இருந்து குரல் வந்தது, ‘ அம்மா செல்லமா அப்பா செல்லமா..யாராருன்னு..’ ” சரியாச் சொன்னீங்க.

நேத்து ரெண்டுபேர் வீட்டுக்குப் போயிருந்தோம் நானும் மணிமாறனும். ரெண்டு அம்மா செல்லத்தைப் பார்த்தோம்.

அவங்க யாருன்னு பேர் சொல்ல மாட்டோம்.ஆனா யாரு உண்மையான அம்மா செல்லம்னு மணிமாறன் சொல்வான்.

” என்று ஆசிரியர் சொல்லி முடித்ததும் மணிமாறன் எழுந்து வந்து நின்றான். எல்லா மாணவர்களும் ,’யார் அந்த ரெண்டு பேர் ? ‘ என்று தெரிந்துகொள்ளும் ஆவலில், எல்லோருடைய கண்களும் மணிமாறன் மீது பதிந்திருந்தன. “ நண்பர்களே நேற்று நானும் ஆசிரியரும் காலையில ஒரு நண்பன் வீட்டுக்குப் போனோம். அவனுக்கு அவனோட அம்மான்னா ரொம்பப் பிடிக்கும்.

அம்மா வீட்டு வேலை முழுவதும் செஞ்சாங்கன்னா சிரமப்படுவாங்கன்னு நெனச்சு, கூடமாட வீட்டுவேலைங்கள இவனும் செய்யறான்.

பார்த்தபோது ரொம்பப் பெருமையா இருந்துச்சு. பொழுது சாயுங்காலையில இன்னொரு நண்பன் வீட்டுக்குப் போயிருந்தோம்.அவனும் அம்மா செல்லம்தான்.

ஆனா இவனுக்குத் தேவையானதை எல்லாம் அவனோட அம்மாதான் செய்யணும்.

தண்ணீர் குடிக்கணும்னாக்கூட அம்மாதான் கொண்டுவரணும். இவனோட சட்டை துணிமணிகளைக்கூட அம்மாதான் மடிக்கணும்.ஐயா வேடிக்கை பார்த்துக்கிட்டுச் சும்மாதான் இருப்பார். நாம் யாருமேல பிரியமா இருக்கோமோ அவங்களுக்கு உதவியா இருந்தாத்தான் உண்மையான பாசம் .

இல்லாட்டி அது வேசம். “என்று பேசி முடித்தான் மணிமாறன்.

செவ்வந்தி டீச்சர், என்னடா இப்பப் புரியுதா நீங்க யாரு செல்லம்னு கேட்டவுடன், ஒட்டுமொத்த மாணவர்களும் ‘புரியுது டீச்சர்’ என்று சேர்ந்து உரக்கச் சொன்னது வகுப்பறைக்கு வெளியேயும் கேட்டது. அதில் முகிலனின் மெல்லிய குரலும் அடங்கியிருந்தது. **