யமுனா விரைவுச் சாலையில் கோர விபத்து 9 பேர் பலி!
24 Sept 2026, 9:15 pm

யமுனா விரைவுச் சாலையில் கோர விபத்து 9 பேர் பலி!

தில்லியிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலத்தின் மஹோபாவிற்கு 35 பயணிகளுடன் சென்ற படுக்கை வசதிகொண்ட சொகுசுப் பேருந்து, கிரேட்டர் நொய்டாவின் யமுனா விரைவுச் சாலையில் புதனன்று இரவு 11:30 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது மின் கசிவு காரணமாகப்பேருந்தில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சில பயணிகள் தப்பித்துக்கொண்டனர்; ஆனால் தூக்கத்தில் இருந்தபயணிகள் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.

இந்நிலையில், இந்த கோர விபத்தில்பெண் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த பல பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

பேருந்தின் ஓட்டுநர் கேபினிலிருந்து கருகிய வாசனை வந்தும், ஓட்டுநரும்நடத்துநரும் அதைப் பொருட்படுத்தாமல் சிகரெட் புகைத்துக் கொண்டு பேருந்தை நிறுத்த மறுத்ததே இந்த கோரவிபத்திற்குக் காரணம் எனப் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். விபத்து நடந்தவுடன் தப்பி ஓடிய ஓட்டுநர் பவன் மற்றும் நடத்துநர் யோகேஷ் ஆகிய இருவரையும் உத்தரப் பிரதேசக் காவல்துறை கைதுசெய்துள்ளது.விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.50,000 நிவாரணமும் வழங்கப்பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.