தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமெரிக்காவில் ஜி ஜின்பிங் இரு நாடுகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பயணம்

23 Sept 2026, 8:38 pm
அமெரிக்காவில் ஜி  ஜின்பிங் இரு நாடுகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பயணம்

அமெரிக்காவில் ஜி ஜின்பிங் இரு நாடுகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பயணம்

வாஷிங்டன், செப்.23-சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் செப்டம்பர் 23 முதல் 25 வரை அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். உலகளவில் நிலவும் பொருளாதார நெருக்கடி, போர்ச் சூழல்களுக்கு இடையே நடைபெறும் இந்தப் பயணம், வெறும் இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பாக மட்டும் பார்க்கப்படாமல், சர்வதேச அரசியலைத் தீர்மானிக்கும் முக்கியப் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த மே மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான வரிகள், வர்த்தகம் மற்றும் முதலீடுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், ஜி ஜின்பிங் மேற்கொண்டுள்ள இந்தப் பயணம் மிகப்பெரிய முக்கியத்துவம் பெறுகிறது. ஜி ஜின்பிங்குடன் மூத்த அதிகாரிகள், முன்னணி தொழிலதிபர்களின் குழுவும் அமெரிக்கா செல்கிறது.

சீனா மீது பல்வேறு தடைகள் வரி விதிப்புகள் ராணுவ மற்றும் பொருளாதார நெருக்கடிகளை அமெரிக்கா திணித்துள்ளது. ஆனால் 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை, மிகப்பெரிய தொழில் துறை மற்றும் அறிவியல் வளர்ச்சியைக் கொண்ட சீனாவைச் பொருளாதாரத்தடைகளை விதிப்பதன் மூலமாக அவ்வளவு சீக்கிரம் உலகப் பொருளாதாரத்திலிருந்து தனிமைப்படுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாது என்பதை சீனா நிரூபித்து வருகின்றது.

அமெரிக்கா - சீனா இடையேயான பரஸ்பர வர்த்தகம் தான் இரு நாட்டுப் பொருளாதாரத்திற்கும், உலக பொருளாதாரத்திகரும் அத்தியாவசியமானது. வர்த்தகப் போர் இரு நாட்டு உழைக்கும் மக்களையும் உலக பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும். அமெரிக்கா அறிவியல் தொழில் நுட்பத்திற்கு முதலீடுகள் செய்வதை விட போருக்கு அதிகம் செலவு செய்கின்றது. ஆனால் சீனா அறிவியல் தொழில் நுட்பங்களுக்கு அதிகம் முதலீடு செய்து நாட்டை வளர்ச்ப்பாதையில் கொண்டு செல்கிறது. இதனால் அமெரிக்க பல நேரங்களில் சீனாவைவிட பின்னுக்கு செல்கிறது. இத்தகைய நிலையில் தன்னுடைய பொருளாதாரப் பின்னடைவுக்குச் சீனாவைக் குற்றம் சொல்வதை விடுத்து, அமெரிக்கா தனது சொந்தக் கொள்கைகளைச் சீரமைக்க வேண்டும். இந்த சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவுகள், பொருளாதாரம், மேற்காசிய போர், எரிசக்தி தட்டுப்பாடு, செயற்கைநுண்ணறிவு துறையின் வளர்ச்சி, செமிகண்டெ க்டர் உள்ளிட்டவை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.