ஆசிய – பசிபிக் சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்” ஷென்சென் உச்சி மாநாடு நிறைவு; 2 கோடி டாலர் நிதியுதவி அறிவித்தார் ஜி ஜின்பிங்
19 Nov 2026, 10:47 pm

“ஆசிய – பசிபிக் சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்”

ஷென்சென் உச்சி மாநாடு நிறைவு; 2 கோடி டாலர் நிதியுதவி அறிவித்தார் ஜி ஜின்பிங்

ஷென்சென், நவ. 19 – “ஒற்றுமையும் பரஸ்பர உதவியும், திறந்த தன்மையும் ஒருங்கிணைப்பும், முனைப்பும் புத்தாக்கமும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியும் கொண்ட ஆசிய – பசிபிக் சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்” என்று சீனஜனாதிபதி ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்தார். சீனாவின் ‘சிலிக்கான் பள்ளத்தாக்கு’ எனப்படும் ஷென்சென் நகரில், “வளமைக்காக ஆசிய – பசிபிக் சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்” என்றமையக்கருத்துடன், உலகப் பொருளாதார உற்பத்தியில் 60 சதவீதத்துக்கும் மேல் பங்கு வகிக்கும் 21 பெரும் பொருளாதார நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க, நவம்பர் 18, 19 தேதிகளில் நடைபெற்ற 33-ஆவது ஆசிய- பசிபிக்பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் (ஏபிஇசி) மாநாட்டுக்குத் தலைமை வகித்து அவர் உரையாற்றினார்.

“ஒரே கப்பலில் பயணிகள்”

“ஆசிய – பசிபிக் சமூகத்தைக் கட்டியெழுப்பி, ஆசிய – பசிபிக் அதிசயத்தின் புதியஅத்தியாயத்தை எழுதுவோம்” என்ற தலைப்பில் ஜி ஜின்பிங் உரையாற்றினார். கடந்த 30 ஆண்டுகளில் விரைவான பொருளாதார வளர்ச்சி மூலம் இப்பிராந்தியம் “ஆசிய – பசிபிக் அதிசயத்தை” நிகழ்த்தியுள்ளது; புதிய வாய்ப்புகளுக்கும் சவால்களுக்கும் ஏற்ப பிராந்திய ஒத்துழைப்புக்குப் புதிய வாய்ப்புகளைத் திறக்க வேண்டும் என்றார் அவர். “ஏபிஇசி உறுப்பு நாடுகள் ஒரே கப்பலில் பயணிக்கும் பயணிகளைப்போன்றவர்கள். பசிபிக்கின் ‘அலைகளைக்’ கடக்க ஒன்றுபட்டு, ஒருவரையொருவர் கவனித்துக்கொள்ள வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார். தனித்தனியான, துண்டாடப்பட்ட அணிகளாக அல்லாமல், திறந்த, ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு முறையை வளர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சீனாவின் அறிவிப்புகள்

ஏபிஇசி அமைப்பின் நடைமுறை ஒத்துழைப்புக்குச் சீனா 2 கோடி அமெரிக்க டாலர் வழங்கும் என்று ஜிஅறிவித்தார். கொள்கை ஆய்வுக்காக ஷென்சென்னில் ‘ஆசிய – பசிபிக் சமூக ஆய்வு மையம்’ அமைக்கப்படும்;எண்மத் தொழில்நுட்பம், எல்லை கடந்த தரவுப் பரிமாற்றம், தூய எரிசக்தி, சிறு – நடுத்தரத் தொழில் வளர்ச்சிஆகிய துறைகளில் ஒத்துழைப்பு அமைப்புகள் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஆசிய – பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பின் ஆதரவாளராகவும், முன்னோடியாகவும் சீனா திகழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘ஷென்சென் நோக்கு’ பிரகடனம்

வழக்கமான ‘பிரகடனம்’ என்பதற்குப் பதிலாக, ‘2026 ஏபிஇசி தலைவர்களின் ஷென்சென் நோக்கு’ (Shenzhen Outlook) என்ற பெயரிலான கூட்டு அறிக்கையை மாநாடு ஒருமனதாகஏற்றுக்கொண்டது. இதனுடன், வர்த்தகம், இணைப்பு, புத்தாக்கம் தொடர்பான மூன்று ஆவணங்களும் ஏற்கப்பட்டன. எல்லை கடந்த பரிவர்த்தனைகளைஎளிதாக்கும் வர்த்தக எண்ம மயமாக்கல் கட்டமைப்பு, எண்மப் பொருளாதாரம் – செயற்கை நுண்ணறிவைச்சமூக,பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் முன்முயற்சி, 2026 – 2035-க்கான ஏபிஇசி இணைப்பு வரைவுத் திட்டம் ஆகியவை அவை. இணையவழிமோசடிகள், தரவுக் கசிவுகள் போன்ற அபாயங்களை எதிர்கொள்ளவும் அறிக்கை அழைப்பு விடுத்துள்ளது. ஆசிய –பசிபிக் தாராள வர்த்தகப் பகுதி (FTAAP) என்ற நீண்டகால இலக்கும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது; எனினும்இது கட்டாயமாகப் பின்பற்ற வேண்டிய ஒப்பந்தம் அல்ல.

தலைவர்களின் குரல்கள்

முன்கணிக்கக்கூடிய, விதிகளின் அடிப்படையிலான வர்த்தகமும், சீர்திருத்தப்பட்ட வலுவான உலக வர்த்தக அமைப்பும் (WTO) தேவை என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ்வலியுறுத்தினார். புவிசார்அரசியல் பதற்றங்கள், இப்பிராந்தியத்தைப் போட்டி அணிகளாகப் பிளவுபடுத்திவிடக் கூடாது என்று எச்சரித்த சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்,டிபிபி (CPTPP), ஆர்செப் (RCEP) போன்ற தற்போதைய ஒப்பந்தங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றார். எரிசக்தி,முக்கியக் கனிமங்கள் ஆகியவற்றின் விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்த வேண்டும் என்று தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் கேட்டுக்கொண்டார். மாநாட்டின் இடையே, சீனா – தென்கொரியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைச் சேவைகள், முதலீட்டுத் துறைகளுக்கு விரிவுபடுத்தும் சுமார் 9 ஆண்டுப்பேச்சுவார்த்தை நிறைவடைந்ததாக ஜியும் லீயும் அறிவித்தனர்.

வளர்ச்சி முன்கணிப்பு உயர்வு

2026-இல் பிராந்தியப் பொருளாதார வளர்ச்சி முன்கணிப்பை 3.2 சதவீதத்திலிருந்து 3.4 சதவீதமாக ஏபிஇசிகொள்கை ஆதரவுப் பிரிவு உயர்த்தியுள்ளது; எரிசக்திச் செலவு, வர்த்தக நிச்ச

யமின்மை காரணமாக 2027-இல்இது 3.1 சதவீதமாகக் குறையும் என்றும்கணித்துள்ளது. குறைகடத்தி (செமிகண்டக்டர்) தேவையால் 2026 முதல் அரையாண்டில் ஏற்றுமதி மதிப்பு 22.5 சதவீதம் உயர்ந்தது. எரிசக்தி விநியோகஅதிர்ச்சிகளும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த தேவையும் உலகப் பணவீக்க அழுத்தத்தை அதிகரிப்பதாகப்பன்னாட்டு நிதி நிறுவனத்தின் (ஐஎம்எப்) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜியேவா எச்சரித்தார். முன்னதாகநவம்பர் 18 அன்று நடைபெற்ற ஏபிஇசிதொழில்துறைத் தலைமை நிர்வாகிகள் உச்சி மாநாடு, ‘ஷென்சென் முன்முயற்சி’யை வெளியிட்டது. எண்மப் பணப் பரிவர்த்தனை, பசுமைச் சரக்குப் போக்குவரத்து, பொறுப்பானசெயற்கை நுண்ணறிவு நிர்வாகம் ஆகியவற்றை அது பரிந்துரைக்கிறது.

சீனா தலைமை வகித்த இந்த ஆண்டின் சாதனைகளைப் பாராட்டிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள்,ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தத் தயார் என்று தெரிவித்தனர். நிறைவுரையாற்றிய ஜி ஜின்பிங், ஒத்துழைப்புக்கான மிகப் பரந்த பொதுத்தளம் வளர்ச்சியே என்றும், ஆசிய – பசிபிக் சமூகம்என்ற கனவை உறுதியான செயல்பாடுகளின் மூலம் நனவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.1989-இல் தொடங்கப்பட்ட ஏபிஇசி அமைப்பில் சீனா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட 21 நாடுகள் உறுப்பினர்களாகஉள்ளன. இந்தியா இதில் உறுப்பினர் அல்ல. சீனா 1991-இல் இணைந்தது; ஏபிஇசி தலைவர்கள் மாநாட்டைச் சீனாநடத்துவது இது மூன்றாவது முறை. 2027 மாநாட்டை நடத்தும் பொறுப்பை ஏற்ற வியட்நாம் ஜனாதிபதி டோ லாம்,அடுத்த ஆண்டு வியட்நாமுக்கு வருமாறு உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஜி ஜின்பிங் முன்வைத்த நான்கு திட்டங்கள்

பொருளாதாரம், வர்த்தகம்: பிராந்திய வர்த்தக ஒப்பந்தங்களை ஒருங்கிணைத்தல்; வர்த்தக, முதலீட்டுத் தடைகளைக் குறைத்து, எண்மமயமாக்கலை ஊக்குவித்தல்.இணைப்பு: உள்கட்டமைப்பு வலைப்பின்னலை மேம்படுத்துதல்; கொள்கைகளையும் விதிமுறைகளையும் ஒத்திசைவுபடுத்துதல்; மக்களுக்கிடையேயான பரிமாற்றம்.புத்தாக்கம்: எண்ம உள்கட்டமைப்பு; செயற்கை நுண்ணறிவின் பரந்த பயன்பாடு; பாரபட்சமற்ற அறிவியல் – தொழில்நுட்ப ஒத்துழைப்பு.வளர்ச்சி: எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு; எல்லை கடந்த ஊழல் தடுப்பு; பசுமை மாற்றம்; மனித வளத்தில் கூடுதல் முதலீடு.