தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

19 Jan 2026, 2:23 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

தவறான அறுவை சிகிச்சை? மாவட்ட ஆட்சியரிடம் புகார்

தருமபுரி, ஜன.19- பிரசவத்தின்போது நடைபெற்ற தவறான அறுவை சிகிச்சையால், தற்போது எனது மனைவி உயிருக்கு போராடி வருகிறார் இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, அவரது கணவர் ஆட்சியரிடம் புகாரளித்துள்ளார். தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த காட் டம்பட்டி, மாரியம்மன் கோவில்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ஜெயமுருகன் (33). இவரது மனைவி முனி யம்மாள் (27). கடந்த டிச.10 ஆம் தேதி பிரசவத்திற் காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவம னையில் முனியம்மாள் சேர்க்கப்பட்டார். பிரசவ அறுவை சிகிச்சையின்போது, முனியம்மாளின் குட லில் ஓட்டை ஏற்பட்டுள்ளது. இதனால் முனியம்மாள், வயிற்று வலி மற்றும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவதியடைந்து வருகிறார். திடீரென முனியம்மாள் ரத்த வாந்தி எடுக்க ஆரம்பித்ததால், பதறிபோய் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஸ்கேன் செய்து பார்த்ததில், பிரசவத்தின்போது அறுவை சிகிச்சை செய்ததில் குடலில் ஓட்டை ஏற்பட்டு தைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும், சிறுகுடல் அழுகி, உயிருக்கு ஆபத்தான நிலையில், தற்போது  சேலம் அரசு மருத்துவனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், ‘குடல் மாற்று அறுவை சிகிச்சை இந்தி யாவிலேயே இல்லை எனவும், இருப்பதை வைத்து  சிறு குடலையும், பெருங்குடலையும் தைத்து அனுப்பு கிறோம்’ என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இத னால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் ஜெயமுரு கன், தவறான அறுவை சிகிச்சையால் பாதிக்கப்பட்ட எனது மனைவிக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கவும், தவறான அறுவை சிகிச்சை செய்த மருத் துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திங்களன்று மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.

நகை கொள்ளை

ஈரோடு, ஜன.19- நாமக்கல் மாவட்டம், பர மத்திவேலூரை சேர்ந்த ஜெய குமார் (54) என்பவர், ஈரோடு, கருக்கன்காட்டூரில் தங்கி,  வேலை செய்து வருகிறார். கடந்த ஜன.15 ஆம் தேதி யன்று குடும்பத்துடன் வெளி யூர் சென்றுவிட்டு, சனியன்று  ஈரோட்டிற்கு வந்துள்ளார். அப் போது தனது வீட்டின் முன் பக்க கதவு திறந்து கிடந்துள் ளது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப் பட்டிருந்த மூன்று பவுன் தங்க தாலிக்கொடி திருடு போயிருப்பது தெரியவந் தது. இதுகுறித்து பெருந் துறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.

போக்குவரத்து நெருக்கடிக்கு பாலங்கள்: முதல்வருக்கு

திருப்பூர் எம்.பி., கடிதம் திருப்பூர், ஜன.19- திருப்பூர் மாநகர போக்குவரத்தில் தொடர்ந்து நிலவுகிற கடும் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு காண  திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழ்நாட் டில் மிக வேகமாக வளர்ந்தும், விரிவடைந்தும் வரும் தொழில்  நகரமாக திருப்பூர் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இங்கு வரலாறு காணாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டு வருகிறது. இதனால் மணிக்கணக்கில் வாகனங்கள்  தேங்கி நிற்கின்றன. எனவே கோவை மாநகரில் உப்பிலிபா ளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை கட்டி முடிக்கப்பட்டுள்ள  ஜி.டி. நாயுடு மேம்பாலம் போல் திருப்பூர் பல்லடம் ரோட்டில்  உள்ள வீரபாண்டி முதல் திருப்பூர் அவிநாசி ரோட்டில் உள்ள  அம்மாபாளையம் வரை நீண்ட மேம்பாலம் அமைக்க வேண் டும்.  அதேபோல ஊத்துக்குளி முதல் வஞ்சிபாளையம் வரை  மேம்பாலத்தினையும் இணைத்து நிறைவேற்றுவதன் மூலம்  நீண்ட காலத்திற்கு திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரி சல் ஏற்படாமல் தடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். மற்றொரு கடிதத்தில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கறிக்கோழி நிறுவனங்களுக்கு குஞ்சு வளர்த்து கொடுக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயர்த்தக்கோரி நிறுவனங்களிடம் கோரிக்கை வைத்து தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த கோரிக்கை  மீது  அரசு கவனம் செலுத்தி கறிக்கோழி நிறுவனங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும்.  இந்த  போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடபட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறுவதோடு, அனைவரையும் உடன டியாக விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என  கேட்டுக் கொண்டுள்ளார்.

ராக்கியாபாளையத்திற்கு கூடுதல் பேருந்து: மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

அவிநாசி, ஜன.19- ராக்கியாபாளையத்தில் செயல்படும் திரு முருகன்பூண்டி நகராட்சி புதிய அலுவலகத் திற்கு பொதுமக்கள் செல்ல ஏதுவாக கூடுதல்  பேருந்து வசதி ஏற்படுத்தி  தர வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர். திருமுருகன்பூண்டி நகராட்சியில் 27 வார் டுகள் உள்ளன. திருப்பூர் எல்லை அம்மாபா ளையம் முதல் அவிநாசி எல்லை அணைப்பு தூர் வரை மட்டுமே பத்து வார்டுகள் இருக்கின் றன. இதில், திருமுருகன்பூண்டி, அம்மாபா ளையம் பகுதிகளில் பனியன் நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், தனியார் பள்ளி கள் என பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் இடங்களாக உள்ளன. மேலும், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.  இங்குள்ள பொதுமக்கள் குடிநீர், வீட்டு வரி,  தண்ணீர், சாக்கடை போன்ற அடிப்படை பிரச் சினைகளுக்கு திருமுருகன்  பூண்டியில் உள்ள நகர்மன்ற அலுவலகத்திற்கு எளிதாக  சென்று வந்தனர். தற்போது இந்த அலுவல கம் ராக்கியாபாளையம் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அடிப்படை தேவைகளை தீர்ப்பதற்காக நகர்மன்ற அலு வலகத்திற்கு வரும் பொதுமக்கள் அம்மாபா ளையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஒன்றரை கிலோ மீட்டருக்கு மேல் நடந்து  செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக் களின் நலனை கருத்தில் கொண்டு ராக்கியா பாளையத்தில் உள்ள நகராட்சி அலுவலகம்  சென்று வர பேருந்துகள், மினி பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள் உள்ளிட்டவைகளை இயக்க வேண்டும் என மார்க்சிஸ்ட்  கம்யூ னிஸ்ட் கட்சி நகராட்சி கிளைகள் கோரிக்கை  வைத்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் மன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியம், தேவ ராஜன் உள்ளிட்டோர் நகர்மன்ற கூட்டத்தி லும் இக்கோரிக்கையை வலியுறுத்தினர்.

அவிநாசிபாளையத்தில் உண்ணாவிரதம் இருந்த விவசாயிகள் 20 பேர் கைது

திருப்பூர், ஜன.19- கறிக்கோழி நிறுவனங்கள் அளித்த புகா ரின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு  விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிர்வாகி களை உடனடியாக விடுதலை செய்யக் கோரி  அவினாசிபாளையத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை திங்க ளன்று காவல் துறையினர் கைது செய்த னர். கோழி வளர்ப்பு கூலியை உயர்த்தி  வழங்கக்கோரி ஜன.1ஆம் தேதி முதல் விவசா யிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைய டுத்து தனியார் நிறுவனங்கள் பண்ணை உரி மையாளர்களை  மிரட்டி, கோழிக்குஞ்சுகளை  இறக்குவதற்கு முற்பட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிர்வாகிகள் பள்ளப்பா ளையம் மற்றும் குடிமங்கலம் பகுதியில் கோழிக் குஞ்சுகளை ஏற்றிச்சென்ற கோழி  நிறுவன வாகனங்களை மறித்து போராட்டத் தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தனியார் கறிக்கோழி நிறுவனங்கள் அளித்த புகாரின் பேரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி உட்பட 10  பேரை கடந்த 13 ஆம் தேதி கைது செய்த னர். இதை கண்டித்து, கைது செய்யப்பட் டவர்களை உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டும். கறிக்கோழி நிறுவனங்களின் மீது  பொய் புகார் கொடுத்தது தொடர்பாக உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு  அரசு கறிக்கோழி பண்ணை விவசாயிகளை  அழைத்து கூலி உயர்வு குறித்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவினாசிபா ளையத்தில் ஜன.18 ஆம் தேதி உண்ணாவி ரதம் போராட்டம் நடைபெற்றது. மேலும், தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடு பட்ட 20 பேர் திங்களன்று கைது செய்யப் பட்டனர்.

பொங்கல் முடிந்தும் பள்ளிக்குத் திரும்பாத மாணவர்கள்: திருப்பூரில் வருகை குறைவு

திருப்பூர், ஜன.19- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன வரி 14 முதல் ஜனவரி 18 வரை அனைத்து பள்ளி களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஜனவரி 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் வழக் கம் போல் இயங்கும் எனப் பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. எனினும், தொழில்  நகரமான திருப்பூரில் திங்கட்கிழமை பள்ளி கள் திறக்கப்பட்ட போது, மாணவர்களின் வருகை மிகக் குறைந்த அளவிலேயே இருந் தது. திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு மாவட் டங்களில் இருந்து வந்து பல்லாயிரக்கணக் கானோர் பணிபுரிகின்றனர். பொங்கல் போன்ற நீண்ட விடுமுறை காலங்களில் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு, விடுமுறையை முன் னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற பல குடும் பங்கள் இன்னும் திரும்பாத நிலையில், அவர் களின் பிள்ளைகள் பள்ளிக்கு வர இயல வில்லை. இந்நிலையில், திருப்பூர் மாநகரில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பயி லும் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கே.எஸ்.சி. ஆண்கள் மேல்நி லைப் பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளின் வகுப் பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாகவே காணப்பட் டன. இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகை யில், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஊர் சென்றவர்கள் திரும்பி வராதது தான், வருகை குறைவுக்கு முக்கிய காரணம். பெரும்பாலான மாணவர்கள் புதன்கிழமை முதல் பள்ளிக்குத் திரும்புவார்கள் என எதிர் பார்ப்பதாக தெரிவித்தனர்.

கோவை விமான நிலையத்தில்  பயணிகள் போக்குவரத்து அதிகரிப்பு

கோவை, ஜன.19– கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள்  போக்குவரத்து அதிகரித்துள்ளது. ஞாயிறன்று சுமார் 1,500 பயணிகள் விமான சேவையை பெற்றுள்ளனர். கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் பய ணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. குறிப்பாக ஞாயிறன்று ஒரே நாளில் மட்டும்  சுமார் 11,000 பயணிகள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர். உள்நாட்டுப் பிரிவில் சென்னை,  பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட 9 முக் கிய நகரங்களுக்கு 27 விமானங்கள் இயக்கப்பட்டன. இவற்றில் சுமார் 9,500 பயணிகள் பயணம் செய்துள் ளனர். சர்வதேசப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, ஞாயிறன்று சுமார் 1,500 பயணிகள் வந்து சென்றுள் ளனர். சிங்கப்பூருக்கு ஸ்கூட் நிறுவனத்தின் 2 விமானங் களும், அபுதாபிக்கு இண்டிகோ விமானமும், ஷார்ஜா வுக்கு ஏர் அரேபியா விமானமும் இயக்கப்பட்டன. இந்த  விமானங்களில் உள்ள மொத்தமான 820 சர்வதேச இருக்கைகளில் 796 இருக்கைகள் நிரம்பியிருந்தன. இது  97 சதவீத இருக்கை நிரம்பல் விகிதமாகும் என்று  இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள் ளது. தற்போது கோவையிலிருந்து ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பயணிகள், நேரடி விமான வசதி இல்லாத தால் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்கள் வழி யாகப் பயணிக்கின்றனர். சர்வதேசப் பிரிவில் காணப்ப டும் இந்த அதிகப்படியான பயணிகள் வருகை, கோவை யிலிருந்து கூடுதல் நாடுகளுக்கு நேரடி விமான சேவை களைத் தொடங்க வேண்டியதன் அவசியத்தைக் காட்டு கிறது.

கிணற்றில் விழுந்த மான் மீட்பு

நாமக்கல், ஜன.19- கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை வனத்துறையி னர் பாதுகாப்பாக மீட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கைலாசம் பாளை யத்தை அடுத்துள்ள ஒடுவம்பாளையம் பகுதியில் ஆடிட்டர்  சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம்  உள்ளது. இங்கு நீண்ட நாட்களாக பயன்படுத்தப் படாத நிலை யில் ஒரு கிணறு உள்ளது. இந்நிலையில், திங்களன்று காலை  தோட்டத்து பக்கம் அதே ஊரைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவர் வந்தபோது ஏதோ சத்தம் கேட்கவே கிணற்றை எட்டிப் பார்த்த போது அதில் ஒரு புள்ளிமான் கிணற்றுக்குள் விழுந்துள் ளதை கண்டார். இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு கொடுத்த  தகவலையைடுத்து, விரைந்து வந்த தீயணைப்புத் துறையி னர் கிணற்றுக்குள் இறங்கி மானை பாதுகாப்பாக மீட்டு, குப் பாண்டம்பாளையம் பள்ளி வளாகத்தில் வைத்திருந்தனர். மேலும் பிடிபட்ட மான் குறித்து நாமக்கல் வனத்துறையின ருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் தெரிந்த வனத்துறையி னர் வந்து மானை மீட்டுச் சென்றனர்.

குறு, சிறு தொழில்களைப் பாதுகாக்க பட்ஜெட்டில் தனி நிதி

கோவை, ஜன.19- ஒன்றிய பட்ஜெட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) துறையைப் பாது காக்கும் வகையில் சிறப்பு நிதி ஒதுக்கீடு மற் றும் ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட அறி விப்புகளை வெளியிட வேண்டும் என தமிழ் நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (TACT) கோரிக்கை விடுத்துள்ளது இது குறித்து அச்சங்கத்தின் தலைவர்  ஜே.ஜேம்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது, நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் குறு, சிறு நடுத்தர தொழில் முனைவோர்களை பாதுகாக்க, வரும் பட்ஜெட்டில் இத்துறைக்கு தொழில் துறையினர் வழங்கும் வருவாயில் ஒரு சத வீதத்தை நிதியாக ஒதுக்கீடு செய்ய வேண் டும். கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 22 ஆயி ரம் கோடி ரூபாய் என்பது மிகக்குறைவா னது. ஒன்றிய அரசு குறு, சிறு தொழில்கள் வாங் கும் இயந்திரங்களுக்கு வழங்கி வந்த 15 சத வீத மானியத்தை மீண்டும் வழங்க இந்த பட் ஜெட்டில் தனி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.  அதேபோல், வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த தவறினால் ‘சர்பாசி’ (SARFAESI) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான கால அவகாசம் 3 மாதமாக குறைக்கப்பட்ட தால் ஆயிரக்கணக்கான தொழில் முனை வோர்கள் தங்கள் தொழிலையும், சொத்துக் களையும் இழந்துள்ளனர். இந்த அவகா சத்தை மீண்டும் 6 மாதமாக உயர்த்தி அறி விக்க வேண்டும். ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு பிறகு ஜாப்  ஆர்டர் செய்பவர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக கோவை யின் அடையாளமான வெட் கிரைண்டர்கள்,  கம்ப்ரஸர்கள் மற்றும் பம்பு மோட்டார்க ளுக்கு விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி யால் இத்தொழில்கள் நலிவடைந்து வரு கின்றன. எனவே, இவற்றை 5 சதவீத வரி  வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்.  மேலும், தொழில்துறைக்கான கடன்களுக்கு  6 சதவீத வட்டியில் கடன் வழங்க அரசு இந்த  பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என அவர்  அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

மூதாட்டியின் நூறாவது பிறந்தநாள்

நாமக்கல், ஜன.19- தனது நூறாவது வயது பிறந்த நாளை ஊர் மக்கள் மற்றும் சுற்றத்தாருடன் மூதாட்டி  கொண்டாடினார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள உலகப்பம்பாளையம் பகுதி யில் வசித்து வரும் மூதாட்டி கூடுமா. இவர்  1926 ஆவது ஆண்டு பதினெட்டாம் தேதி ஜன வரி மாதம் கர்நாடக மாநிலம் தங்க வயல்  கோலார் பகுதியில் பிறந்துள்ளார். இவருக்கு  ஞாயிறன்று நூறாவது பிறந்தநாள் விழா  இதனை அவர்களது குடும்பத்தார் கொண்டா டினர். திருச்செங்கோடு உலகப்பம் பாளை யம் தாதாபீர் தர்கா பகுதியில் நடைபெற்ற விழாவில் கூடுமா தனது பிறந்த நாளை கேக்  வெட்டி கொண்டாடினார். மகன், பேரன், பேத்திகள், மற்றும் கொள்ளு பேத்தி உற்றார்  உறவினர்கள் என பலரும் கேக் ஊட்டியும் பரிசுகள் கொடுத்தும் ஆசிகள் பெற்றும் இந்த  கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

வரதட்சணை கொடுமை: கர்ப்பிணி புகார்

சேலம், ஜன 19- எடப்பாடி மேட்டங்காடு பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி  ஒருவர் வரதட்சனை கேட்டு கொடுமை செய்வதாக திங்க ளன்று சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித் தார். சேட்டு என்பவரின் மகள் கார்த்திகா (19). இவருக் கும் பிரவீன் (33) என்பவருக்கும் கடந்த இரண்டு  ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந் நிலையில், கார்த்திகா அளித்த மனுவில், “திருப்பூரில் வசித்து வந்தபோது, கூடுதல் வரதட்சணை கேட்டு எனது  கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் என்னை அடிக் கடி சித்ரவதை செய்தனர். முதல்முறை நான் கர்ப்பமாக  இருந்தபோது, அவர்கள் தாக்கியதில் கருக்கலைப்பு ஏற் பட்டது. தற்போது நான் மீண்டும் 7 மாத கர்ப்பிணியாக உள்ளேன். இந்த நிலையிலும், ‘20 பவுன் நகை கொண்டு  வந்தால்தான் வாழ விடுவோம்’ எனக் கூறி, தகாத வார்த்தைகளால் பேசி என்னை வீட்டை விட்டு வெளி யேற்றிவிட்டனர்.” கூலித் தொழிலாளியான தனது தந்தையிடம் பணம்  இல்லாத சூழலில், என்னை வரதட்சனை கேட்டு மிரட்டுகின்றனர் என  அதிகாரிகளிடம் மனு அளித்தார். இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.