தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உழைக்கும் மக்களுக்கு வர்க்க உணர்வை ஊட்ட வேண்டும்!

11 May 2026, 12:00 am
உழைக்கும் மக்களுக்கு வர்க்க உணர்வை ஊட்ட வேண்டும்!

உழைக்கும் மக்களுக்கு வர்க்க உணர்வை ஊட்ட வேண்டும்!

ஈரோடு, மே 11- உழைக்கும் மக்கள் தங்களை ஒரு வர்க்கமென்று தாங்களே உணர்ந்து கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு வர்க்க உணர்வு என்பது ஊட்டப்பட வேண்டும் என்று எழுத்தாளர் ச.தமிழ் செல்வன் குறிப்பிட்டார்.

சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ச.தமிழ்செல்வனுக்கு, தமு எகச சார்பில் ஈரோட்டில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று தமிழ் செல்வன் ஏற்புரையாற்றுகையில், எழுத்தாளனை உற்சாகப்படுத்தக் கூடிய ஒரே விஷயம், தன்னுடைய படைப்பு சரியாக புரிந்து கொள்ளப் பட்டது என்பது தெரியும் போதுதான்.சி.என்.அண்ணாதுரை நாடகம் போடும் போது, முக்கிய விசயத்தை இரண்டா வது, மூன்றாவது முறை அதே வச னத்தை சொல்வாராம். ஏனென்றால் பார்வையாளர்கள், வாசகர்களிடம் சேர வேண்டும் என்பதற்காக. இது அவ ரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய முக் கியமான பாடம். உணவு, உடை, இருப் பிடம் ஆகியவற்றை உற்பத்தி செய் கின்ற வேலை பிராமண சமூகத்திற்கு கிடையாது. அவர்களுக்கு என்ன வேலை, கதை பேசுவது, கதைகளைப் பற்றி கதை பேசுவது, நடனம் ஆடு வது, நடனம் பார்ப்பது, அதற்குள் பல நுட்பங்களை உருவாக்குவது, தேவ தாசிகள் ஆடிய நடனத்தில் காமத்தை தூண்டும் சிருங்கார ரசத்தை நீக்கி விட்டு சட்டம் போட்டு பரதநாட்டியமாக் கியது. அதை தனதாக்கி சாஸ்திரமாக்கி னர். அவர்களுக்கு வாழ்க்கை முக்கிய மில்லை, சாஸ்திரம் தான் முக்கியம். சிறுகதையிலும் சாஸ்திரத்தை உரு வாக்கினர். நமக்கான சிறுகதைகளை, வடிவத்தை, அழகியலை நாம் உரு வாக்க தவறியிருக்கிறோம். நாட்டுப் புற கதை சொல்லும் மரபிலிருந்து சிறுகதைகளை நாம் உருவாக்கியிருந் தால், பிரச்சாரமாக எழுதுகிறீர்கள் என்று சொல்வதற்கு இடம் வந்திருக் காது. எல்லா இடங்களிலும் அரசியல் இருக்கிறது. தமிழ் சிறுகதைகளுக்குள் ளும் நுட்பமான அரசியல் இருக்கிறது. சாதி ஒளிந்திருக்கிறது. சிறுகதைக ளுக்குள் எப்படி ஒளிந்திருக்கிறது என் பதை கண்டுபிடிப்பதுதான் இந்த புத் தகம்.

இது சிறுகதை இலக்கியம் என்று தயவு செய்து யாரும் எண்ணிவிட வேண் டாம். 100 ஆண்டு கால பண்பாட்டு வர லாற்றை சிறுகதைகளின் ஊடாக வாசித் துப் பார்த்த அனுபவம் தான் இந்த புத்த கம். ஆக இது எல்லாருக்குமான புத்த கம் தான். புத்தகம் பொன், பொருளைப் போல பாதுகாப்பதற்காக புத்தகங்கள் எழுதப்படவில்லை, வாசிப்பதற்காக எழுதப்பட்டவை. ‘தமிழ் சிறுகதைக ளின் தடங்கள்’ பற்றி ஊர் ஊராக பேசு வேன் என்று நினைக்கவில்லை. ‘திருப் பியடித்த வரலாறு’ புத்தகம் தமிழ்நாடு முழுவதும் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். திருப்பியடித்த வர லாறு இளைய சமூகத்திற்கு சொல்லப் பட வேண்டிய, சொல்லப்படாத, அறி யாத அரசியல் வரலாறு. தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுவுடைமை இயக் கம் எப்படி எழுச்சியோடு எழுந்தது, அடித்தால் திருப்பியடி என்று எப்படி சீனிவாசராவ் அந்த மக்களை எழுச்சிய டைய வைத்தார். எந்த ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்தாலும் செங்கொடியை கண்டால் அடித்தார்கள். முதல் தொகு தியில் பிரிட்டிஷாரும், காங்கிரஸ் ஆட்சி யாளர்களும் எப்படி அடித்தார்கள், இரண்டாவது பாகத்தில் திமுகவும், அதிமுகவும் எப்படி கம்யூனிஸ்ட்டு களை அடித்தார்கள் என்பதை எழுதி யுள்ளேன். இது தமிழகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய பொக்கிசம். உழைக்கும் மக்கள் தங்களை ஒரு வர்க்கமென்று தாங்களே உணர்ந்து கொள்ள மாட்டார்கள். வர்க்க உணர்வு என்பது ஊட்டப்பட வேண்டும்.

சாதி உணர்வு என்பது பிறவியி லேயே வந்ததா? வெளியிலிருந்து ஊட்டப்பட்டதுதான். மத உணர்வும் இயல்பாக வந்ததல்ல, ஊட்டப்பட்டது தான். அதைப்போல நேர்மையான சிந் தனைகளை, வாழ்க்கை கண்ணோட் டத்தை ஊட்ட வேண்டும். என்பது எழுத் தாளனின் கடமை. அந்த கடமையை தான் நான் செய்து வருகிறேன் என்று குறிப்பிட்டார்.

புத்தக வாசிப்பின் அவசியம்: தமிழ்ச்செல்வன் பேச்சு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட் டக்குழு சார்பில், ஞாயி றன்று நடைபெற்ற நிகழ்வில் தமிழ்ச்செல்வன் பேசுகை யில், கார்ப்பரேட் ஆதிக்கம் செலுத்தும் உலகில் ஊடகங் கள் அடுத்தடுத்து மாறிக் கொண்டே செல்ல வேண் டும் என்று சலிப்பை ஏற்படுத் துவதாக இருக்கிறது. இவ் வாறு சீக்கிரம் சலிப்படையும் உளவியலை எதிர்த்த பண்பாட்டு பணி தேவை. அதற்கு புத்தக வாசிப்பு அவசியம். சாமானிய மக்கள் காட்சிரீதியாக சிந்திக்கின்றனர். கருத்தியலாக சொல்வதை அவர்கள் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே புத்தக வாசிப்பு எல்லா பகுதிகளிலும் நடைபெற வேண்டும். இத்தகைய வாசிப்பு முகாம்களில் ஒருவர் புத்தகத்தை படித்து விட்டு வர, மற்றவர்கள் கேட்டுவிட்டு போவது என்பதாக இருக்கக் கூடாது. புத்தக வாசிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் ஒரு புத்தகத்தை முழுமையாக படித்து அங்கு அதை பற்றி உரையாட வேண்டும். இதுதான் புத்தக வாசிப் புக்கு முக்கியம். இன்றைய காலத்தில் நாம் சமூக உளவிய லோடு போராட வேண்டும், என்றார். இந்நிகழ்வில், தமுஎகச மாநில பொதுச்செயலாளர் களப்பிரன், மாவட்டத் தலை வர் சம்பத், செயலாளர் பி.ஆர்.கணேசன், மாநில செயற் குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.