எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு பாராட்டு விழா
21 May 2026, 1:27 am
<p><strong>எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு பாராட்டு விழா </strong></p><p>கிருஷ்ணகிரியில் சாகித்ய அகாடமி விருதாளர் ச.தமிழ்செல்வனுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஓசூர் கிளை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கிளைத் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் பழ.பாலசுந்தரம் வரவேற்றுப் பேசினார். விழாவில் எழுத்தாளர்கள் ஜெ.தீபலட்சுமி, பி.பாலசுப்பிரமணியம் மற்றும் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் கலந்துகொண்டு, ச.தமிழ்ச்செல்வனின் இயக்கப் பணிகளையும் இலக்கியப் பங்களிப்புகளையும் குறித்து விரிவாக உரையாற்றினர். விழாவில் ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் கமலாலயன், சிவந்தி அருணாச்சலம், பாலகிருஷ்ணன் மற்றும் சி.பி.ஜெயராமன் ஆகியோர் விருதாளரைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினர். இதனைத் தொடர்ந்து விருதாளர் ச.தமிழ்ச்செல்வன் பாராட்டுக்கு ஏற்புரையாற்றினார். விழாவின் ஒரு பகுதியாக தமுஎகச கலைக்குழு பாடகர் ஆறுமுகம் முற்போக்கு பாடல்களைப் பாடி சிறப்பித்தனர். இறுதியாகக் கிளைச் செயலாளர் தணிகாசலம் நன்றி கூறினார்.</p>
