எழுத்தாளர் ரஜினி பெத்து ராஜா படைப்புலகம் நிகழ்ச்சி
8 Jun 2026, 9:40 pm
<p><strong>எழுத்தாளர் ரஜினி பெத்து ராஜா படைப்புலகம் நிகழ்ச்சி </strong></p><p>இராஜபாளையம், ஜூன் 8- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில், தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் எழுத்தாளர் ரஜினி பெத்து ராஜாவின் படைப்புலகை மையமாகக் கொண்ட இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ச.தேவ தாஸ் தலைமை வகித்தார். ராமையா வரவேற்புரை யாற்றினார். நிகழ்ச்சியில் கவிஞர் இரா.ஆனந்தி மற்றும் கவிஞர் மதுமிதா ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மேலும், பூங்குழலி, ரம்யா, ஸ்ரீ மகாலட்சுமி உள் ளிட்டோர் எழுத்தாளர் ரஜினி பெத்து ராஜாவின் படைப்பு கள், இலக்கிய பங்களிப்புகள் மற்றும் படைப்புலகின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்க உரையாற்றினர். நிகழ்ச்சியை கண்மணி ராசா தொகுத்து வழங்கினார்</p>
