எழுத்தாளர் கோவிந்தராஜூலு காலமானார்
6 hours before
<p><strong>எழுத்தாளர் கோவிந்தராஜூலு காலமானார்</strong></p><p>புதுச்சேரி, செப்.11-ஆசிரியர், எழுத்தாளர் ஆ. கோவிந்தராஜுலு (81) காலமானார். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் எஸ். ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம், புதுவை அறிவியல் இயக்கம், அறிவொளி இயக்கம் ஆகிய அமைப்புகளில் நீண்ட நாள் அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றியவர் கரிக்கலாம்பாக்கம் ஆசிரியர் எழுத்தாளர் தோழர் ஆ. கோவிந்தராஜுலு. அவரது மறைவிற்கு ஆழ்ந்த வருத்தத்துடன் கூடிய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.</p><p>இறுதி நிகழ்வுஅன்னாரது இறுதி நிகழ்வு விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அவரது மகன் இல்லத்தில் வெள்ளிக்கிழமை (செப்.11) மாலை நடைபெற்றது. இதில் சிபிஎம் புதுச்சேரி வில்லியனூர் கமிட்டி செயலாளர் ராமமூர்த்தி, அறிவியல் இயக்க நிர்வாகிகள், எழுத்தாளர்களும் கலந்து கொண்டு அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.</p>
