முந்தய பக்கம்

ஞானேஷ் குமாருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு

9 Oct 2026, 12:01 am
ஞானேஷ் குமாருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு

ஞானேஷ் குமாருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு

புதுதில்லிதலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோரின் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பிரிவு 32-ன்கீழ்சுரி பயாலா என்பவர் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், (Diary No. 63078/2026) 2023-ஆம் ஆண்டின் ‘தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்ட விதிகளை’ (Sections 5, 6, 8(1)) மீறி இந்த நியமனங்கள் நடைபெற்றுள்ளது. 2023-ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 5-இன்படி,நியமிக்கப்படும் ஆணையர்களுக்குத் தேர்தல் நடைமுறைகளைக் கையாண்ட முன்அனுபவம் இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய ஆணையர்களுக்கு அத்தகைய முன் அனுபவம் எதுவும் இல்லை. நியமனத்தின்போது ஒன்றிய அரசின்தேடுதல் குழு சட்டப்பூர்வமான விதிமுறைகளையும் தகுதிப் பட்டியலையும் சரியாகப் பின்பற்றவில்லை. இதற்கு எதிராக தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணை தேதி தொடர்பாக இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram