முந்தய பக்கம்

வழிபாட்டு பிரச்சனை: எஸ்.பி அலுவலகத்தில் புகார்

9 Jan 2026, 3:41 pm
வழிபாட்டு பிரச்சனை:  எஸ்.பி அலுவலகத்தில் புகார்
<p><strong>வழிபாட்டு பிரச்சனை: &nbsp;எஸ்.பி அலுவலகத்தில் புகார்</strong></p> <p>சேலம், ஜன.9- கோவிலில் வழிபாடு நடத்துபவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார ளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ள ரங்கம்பாளையம் பகுதியில் போயர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கோவில் உள்ளது. இக்கோவிலில் ஐந்து வகை யறாவை சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் வழிபட்டு வந்த னர். கடந்த சில மாதங்களாகவே அப்பகுதியைச் சேர்ந்த முருகன் மற்றும் அவரது சகோதரர் சரவணன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர், கோவிலுக்குள் சென்று வழிபட விடா மலும், பொங்கல் வைத்து கொண்டாடவும் தடை விதித்து &nbsp;மிரட்டி வருகின்றனர். நான்கு வகையறாவைச் சேர்ந்தவர் களை கோவில் அருகே செல்ல விடாமல் தடுத்து வருகின்ற னர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தும் எந்த வொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படு கிறது. இந்நிலையில், வெள்ளியன்று அப்பகுதியைச் சேர்ந்த &nbsp;30க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கோவிலில் பொங்கல் வைத்து வழிபட வேண்டும். கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவ டிக்கை எடுத்து, தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் &nbsp;என வலியுறுத்தி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram