உலக யோகாசனா சாம்பியன்ஷிப் போட்டி அறிமுகம் புதுதில்லி, மே 26- இந்திய விளையாட்டிலும் உலகளாவிய
27 May 2026, 12:38 am
<p><strong>உலக யோகாசனா சாம்பியன்ஷிப் போட்டி அறிமுகம் புதுதில்லி, மே 26- இந்திய விளையாட்டிலும் உலகளாவிய </strong>ஆரோக்கியத்திலும் ஒரு வரலாற்று மைல்கல்லாக, முதலாவது ‘உலக யோகாசனா சாம்பியன்ஷிப் 2026’ அறிமுக விழா புது தில்லியில் நடைபெற்றது. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இதன் அதிகாரப்பூர்வ சின்னம் , கோப்பை, ஜெர்சி மற்றும் ‘வீர்’ என்ற சிங்கம் சின்னத்தை (மஸ்காட்) வெளியிட்டார். யோகாசனத்தை ஒரு போட்டி விளையாட்டாக உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் இந்தியாவின் லட்சிய முயற்சியாக இத்தொடர் அமைகிறது. இப்போட்டிகள் 2026 ஜூன் 4 முதல் 8 வரை அகமதாபாத்தில் உள்ள ஏகா அரேனாவில் நடைபெற உள்ளன. இதில் உகாண்டா, ஜப்பான், நேபாளம், நெதர்லாந்து உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சிறந்த யோகாசனா வீரர்கள் பங்கேற்கின்றனர். பாரம்பரிய யோகாசனா, கலைநய யோகாசனா , ரித்மிக் பேர்ஸ் மற்றும் குழு போட்டிகள் எனப் பல பிரிவுகளில் சர்வதேச விதிகளின்படி போட்டிகள் நடத்தப்படும். இந்த சாம்பியன்ஷிப் மூலம் யோகாசனத்தை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்ப்பதற்கான நீண்டகால இலக்கை அடைய இந்தியா திட்டமிட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள இளைஞர்களை யோகாசனம் நோக்கி ஈர்க்கவும், இதை ஒரு முழுமையான விளையாட்டு பொருளாதாரமாக உருவாக்கவும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.</p>
