உலக வனவிலங்கு தினம்: திருப்பூரில் மாணவர்களுக்கு பயிற்சி
3 Mar 2026, 3:38 pm
<p><strong>உலக வனவிலங்கு தினம்: திருப்பூரில் மாணவர்களுக்கு பயிற்சி</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 3- உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பறவைகளை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக் கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு 2 மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனச்சரகம் இணைந்து செவ்வாயன்று நஞ்சராயன் பறவை கள் சரணாலயத்தில் பறவைகளை பார்வையிடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் வனவர் பிரேமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், மனிதர்கள் அனைவரும் பறவைக ளின் முக்கியத்துவத்தை அறிந்து அவற்றை நேசிக்க வேண் டும். பறவைகள் மற்றும் விலங்குகள் இல்லையேல் மனிதர்க ளால் வாழ முடியாது. பறவைகள் அதிகளவில் மரங்களை நடவு செய்து புவியின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்கின் றன. பறவைகள் மற்றும் வனவிலங்குகளின் வாழ்விடங் களை அழிக்க கூடாது என தெரிவித்தார். அத்துடன் பறவை களை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்தும் பயிற்சி அளித்தார். இதையடுத்து மாணவ மாணவிகள் பறவையி னங்களை பார்வையிட்டு குறிப்பு எடுத்துக்கொண்டனர். </p>
