முந்தய பக்கம்

உலக நடைபயண தின போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

2 Oct 2026, 10:08 pm
உலக நடைபயண தின  போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
<p><strong>உலக நடைபயண தின போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி</strong></p><p>குழித்துறை, அக். 2-குமரி மாவட்டம், மார்த்தாண்டம் எவர்கிரீன் வாக்கர்ஸ் அசோசியேஷன் சார்பில் உலக நடைபயண தினத்தை முன்னிட்டு நடைபயிற்சி விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு பேரணி அக்டோபர் 2 வெள்ளியன்று களியக்காவிளையில் தொடங்கி மார்த்தாண்டம் கிறிஸ்தவ கல்லூரி வரை நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி கலந்து கொண்டு வெட்டுமணி பகுதியிலிருந்து மார்த்தாண்டம் பாலம் வழியாக கிறிஸ்தவ கல்லூரி வரை நடைபயணம் சென்றார்.பேரணியில் பங்கேற்ற அனைவரையும் வாழ்த்தி உரையாற்றினார். நடைபயிற்சியின் அவசியம் குறித்தும்,போதைப்பொருள் இல்லாத ஆரோக்கியமான தமிழ்நாட்டை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கிப் பேசினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram