நிறத்தால் ஒதுக்காதே... மனதால் காயப்படுத்தாதே! வெண்புள்ளி விழிப்புணர்வு அவசியம்
3 Jun 2026, 11:34 pm

நிறத்தால் ஒதுக்காதே... மனதால் காயப்படுத்தாதே! வெண்புள்ளி விழிப்புணர்வு அவசியம்

“வெண்புள்ளி பாதிப்பு என்பது ஒரு தொற்று நோய் அல்ல; அது உடலின் ஒரு இயல்பான தோல் நிலை மட்டுமே,” என்று வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்க இந்திய அமைப்பின் செயலாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் உலக வெண்புள்ளி விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுவதையொட்டி, சமூக த்தில் நிலவும் தவறான புரிதல்களைக் களைய வேண்டும்.

இது தொற்று நோய் அல்ல! நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நமக்குத் தோல் நிறத்தை வழங்கும் ‘மெலனோசைட்டுகள்’ எனப்படும் நிறமி அணுக்களைத் தவ றாகக் கிருமி என நினைத்துத் தாக்கி அழிக்கிறது.

இந்த ஆட்டோ இம்யூன் செயல்பாட்டின் காரணமாகவே தோலின் சில பகுதிகள் தங்களின் இயற்கை நிறத்தை இழந்து வெண் புள்ளிகளாக மாறுகின்றன.

இது ஒரு நபர் தன் பழக்கவழக் கங்களால் வரவழைத்துக் கொள்வதோ அல்லது நினைத்தவுடன் தடுத்து நிறுத்தக்கூடியதோ அல்ல.

முற்றிலும் தொற்று நோய் அல்லாத இந்த வெண் புள்ளி பாதிப்பு, உயிருக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாது.

எனவே, இதைப் பார்த்து யாரும் தேவையற்ற பயம்கொள்ள வேண்டியதில்லை. வெண்புள்ளிகளால் ஏற்படும் தோல் ரீதியான மாற்றத்தை விட, இவர்கள் மீது சமூகம் வீசும் பார்வை களும் கேலிகளும் தான் மிகவும் கொடு மையானவை. “பக்கத்தில் போகாதே, விளையாடாதே, நமக்கும் ஒட்டிக் கொள்ளும்” எனப் பள்ளிகளிலும், பொது இடங்களிலும் இன்றும் பலர் இவர்களைப் புறக்கணித்துக் காயப் படுத்துகிறார்கள்.

இத்தகைய புறக்கணிப்பால், தங்களைத் துணிகளால் முழுமையாக மூடி மறைத்துக் கொள்ளுமாறு இவர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள்.

இது பலரது தன்னம்பிக்கையை முற்றிலும் சிதைத்து விடுகிறது. தழும்புகளை விட, சமூகத்தின் ஒவ்வாத பார்வைகளே இவர்களின் மனதை அதிகம் உலுக்குகின்றன.

உலகளாவிய உண்மை உலக மக்கள் தொகையில் சுமார் 1% மக்கள்—அதாவது அனைத்து வயது மற்றும் இனத்தைச் சேர்ந்த மில்லியன் கணக்கானோர்—இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைச் சமூகம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தை வெண்புள்ளி விழிப்பு ணர்வு மாதமாகக் கொண்டாடுவதன் நோக்கம், இது வெறும் தோல் சார்ந்தது மட்டுமல்ல என்பதை உணர்த்துவதே. சிலருக்கு இது ஒரு சாதாரண தோல் நிலை, ஆனால் பல ருக்கு இது தங்களின் சுய அடையா ளத்தை ஏற்றுக்கொண்டு வாழப் பழகும் ஒரு வாழ்நாள் பயணம்.

சமூகத்தின் கடமை: பரிதாபமல்ல, சம உரிமை! மக்களிடையே இருக்கும் தவறான புரிதல்களை நீக்கி விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த மாதத்தின் முக்கிய நோக்கமாகும்.

அழகை வெறும் நிறத்தில் மட்டும் தேடாமல், மனிதர்களின் அனைத்து வடிவங்க ளையும், திறமைகளையும் சமூகம் சமமாக மதிக்கப் பழக வேண்டும்

. பாதிக்கப் பட்டவர்களுக்குத் தனிப் பரிதாபமோ அல்லது ஒதுக்குதலோ தேவையில்லை; மற்றவர்களைப் போலச் சம உரிமையோடும், கண்ணி யத்தோடும் நடத்தினாலே போது மானது.