வேலூரில் உலக மருந்தாளுநர் தின விழா
27 Sept 2026, 3:05 am

வேலூரில் உலக மருந்தாளுநர் தின விழா

வேலூர், செப். 26 –தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வுபெற்ற மருந்தாளுநர் சங்கம் சார்பில் உலக மருந்தாளுநர் தின விழா மற்றும் வேலூர் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் வேலூரில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் எஸ்.சண்முகம் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில், நாராயணன், துர்க்கேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தே.ரவி வரவேற்க, டி.சேகர் பாபு தொடக்க உரையாற்றி

னார். மாவட்டச் செயலாளர் ஜீவநாதன் செயல் அறிக்கையையும், பொருளாளர் வி.ராஜேஷ்குமார் நிதிநிலை அறிக்கையை யும் சமர்ப்பித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் பா.வேலு, சுகாதார ஆய்வாளர் சங்க செயலாளர் சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலத் துணைத் தலைவர் தே.வேந்தன் சிறப்புரையாற்ற, மாநிலச் செயலாளர் பா.பார்த்தசாரதி நிறைவுரை யாற்றினார். முடிவில் முகமது அஸ்வக் நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில், இஎஸ்ஐ மருத்துவமனை மருந்து கிடங்கிற்கு குளிர்சாதன வசதி ஏற்படுத்தித் தருவது,வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசரப் பிரிவில் உள்ள மருந்தகத்தை குறைந்தது 300 சதுர அடியில் கழிவறையு டன் கூடிய வசதி யுடன் அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.