தீக்கதிர் உலக செய்திகள்
14 Jul 2026, 9:34 pm

சீன ஏர் கண்டிஷனர்கள் தேவை அதிகரிப்பு

ஸ்பெயின் மற்றும் ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் அந்நாடுகளில் ஏர் கண்டிஷனர்கள் தேவை அதிகரித்து வருகிறது. விலை குறைவாகவும், அதே நேரத் தில் மின்சாரத்தை குறைவா கப் பயன்படுத்தும் ஏர் கண்டி ஷனர்களை மக்கள் தேடத் தொடங்கியுள்ளனர். தரம், மலிவான விலை மற்றும் நம்பகமான செயல்திறன் ஆகியவற்றை வழங்குவதால், பல நுகர்வோருக்கு சீன பிராண்டுகள் சிறந்த தேர்வாக மாறி வருகின்றன. மக்கள் சீன பிராண்டுகளைக் கேட்டு வாங்குகின்றனர், என்று துறை சார் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மின்கட்டமைப்புகளை சீரமைத்த வெனிசுலா

வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கங்களால் பலியானோரின் எண்ணிக்கை 4,561 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 16,740 பேர் படுகாயம டைந்துள்ளனர்.பாதிக்கப்பட்ட மக்களுக்காக 107 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் 20,231 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 17,907 பேர் தங்குவதற்கு வீடின்றி தவித்து வருவதாகவும், 856 கட்டடங்கள் சேதமடைந்து ள்ளதாகவும் அந்நாட்டு நாடா ளுமன்றத் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். அதேபோல வெனிசுலா தனது சிதைந்து போன மின்கட்டமைப்பில் 96 சதவீதத்தை சீரமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்து தீ விபத்து : பலி எண்ணிக்கை உயர்வு

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள இசை மதுபானக் கூடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் 70க்கும் மேற் பட்டோர் காயமடைந்துள்ள தாகவும், அவர்களில் 24 பேரின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ள தாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த மதுபானக் கூட தீ விபத்து, கடந்த 17 ஆண்டு களில் பாங்காக் நகரில் ஏற்பட்ட மிக மோசமான விபத்தாகும். தீ விபத்து நடந்த இடம் தற்காலி கமாக மூடப்பட்டு, தடயவியல் அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் கனமழை : 11 பேர் பலி

பாகிஸ்தானில் கனமழை காரணமாக, 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் கடுமையான பருவமழையால் அடிக்கடி ஏற்படும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பெரும் உயி ரிழப்புகளையும் கடுமை யான பொருள் சேதங்களை யும் ஏற்படுத்துகின்றன. கடந்த 2022-ஆம் ஆண்டில் பெய்த வரலாறு காணாத பருவமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக நாட்டின் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. அந்தப் பேரிடரில் 1,739 பேர் உயிரிழந்ததோடு, சுமார் 30 பில்லியன் டாலர் மதிப்பிலான சேதங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் படுகொலை : உக்ரைன் தளபதி கைது

பொதுமக்களை படுகொலை செய்த குற்றச்சாட்டில் உக்ரைன் ராணுவ தளபதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உக்ரைனின் 155-வது தனி மெக்கானைஸ்டு பிரி கேடின் முன்னாள்தளபதி ஸ்டானிஸ்லாவ் லுச்சானோவ் தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக , இரண்டு உக் ரைன் குடிமக்களைக் கடத்தி கொலை செய்ய தனது கீழ் பணிபுரிந்த வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தற்போது இவர் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு முன்பாக, இந்த வழக்கில் தொடர்புடைய 9 ராணுவ வீரர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.