தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

1 Aug 2026, 9:29 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்புகளை

அதீத வெப்பம் பாதிக்கும் - உலக வங்கி எச்சரிக்கை இந்தியாவில் வீசும் அதீத வெப்பமானது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது என உலக வங்கி தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது. முறையான தகவல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், தொழிலாளர் உற்பத்தித்திறன், உள்கட்டமைப்பு மற்றும் நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் எனவும் கூறியுள்ளது. 2024 ஆம் ஆண்டில் வெப்பத்தின் தாக்கத்தால் இந்தியாவில் தோராயமாக 24,700 கோடி மணிநேரம் உழைப்பும், 19,400 கோடி ரூபாய் வருமான இழப்பும் ஏற்பட்டுள்ளன. இதில் விவசாயம் 66 சதவீத இழப்பையும், கட்டுமானம் 20 சதவீத இழப்பையும் சந்தித்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு துணைபோகக் கூடாது: பிரிட்டனுக்கு ஈரான் எச்சரிக்கை

ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் போருக்கு ஒத்துழைக்க வேண்டாம் என்று பிரிட்டனை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார். வெள்ளிக்கிழமையன்று பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் எட் மிலிபண்டுடன் தொலைபேசியில் உரையாடியபோது அராக்சி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். மேலும், தற்காப்பு ஒப்பந்தங்கள் உட்பட எந்த பெயரில் “அமெரிக்காவுடன் “ செய்யப்படும் எந்தவொரு ஒத்துழைப்பும் “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் அவர் கூறியுள்ளார். அதேபோல ஈரான் இது தாக்குதல் நடத்த பிரிட்டனின் நிலமோ அல்லது அதன் தொடர்புடைய எந்த ஒரு விஷயமும் பயன்படுத்தக்கூடாது எனவும் மறைமுகமாக எச்சரித்துள்ளார்.

அமெ.வுக்கு சவால் விடும் கொலம்பியா ஜனாதிபதி

கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோ கியூபாவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கியூபா மீது தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பயணத்தை அறிவித்துள்ளார். கியூபா 2,000 கொலம்பிய மருத்துவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளது. அந்நாடு தான் கோவிட்-19 தடுப்பூசி மூலம் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றினார்கள். மனிதகுலம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சனைகளுக்கு “ஏவுகணைகளோ, போரோ அல்லது பொருளாதாரத் தடைகளோ தீர்வாகாது” என்றும் அவர் கூறியுள்ளார்.

உக்ரைனை எப்படி வேண்டுமானாலும் சூறையாடுவோம் : டிரம்ப்

வாஷிங்டன்,ஆக.1-கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் உக்ரைன் கனிம ஒப்பந்தம் கையெழுத்திட்டது. அதன்படி உக்ரைன் மண்ணில் உள்ள அரியமண் கனிமங்களை எப்படி வேண்டுமானாலும் சூறையாடுவோம் என்பதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மறைமுகமாகபேசியுள்ளார். ரஷ்யாவுடன் உக்ரைன் நடத்திய போருக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் 300 பில்லியன்டாலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள ராணுவ உதவி செய்துள்ளன. அப்படி கொடுக்கப்பட்ட உதவியை ஐரோப்பிய ஒன்றியகடன் (loan) அடிப்படையில் கொடுத்தது. ஆனால் அமெரிக்கா அப்படி கொடுக்கவில்லை. இந்நிலையில் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கொடுத்த உதவிக்கு உக்ரைன் தனது மண்ணில் உள்ள கனிமவளங்களை அமெரிக்காவுக்கு கொடுக்க வேண்டும் என மிரட்டியது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தேவையான அந்தகனிமங்களை கைப்பற்ற ஐரோப்பிய ஒன்றியமும் முயற்சித்தது. ஆனால் டிரம்ப் தொடர் மிரட்டல்கள் மூலமாக உக்ரைனுடன்கனிம வள ஒப்பந்தங்களை மேற்கொண்டார். இந்நிலையில் தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய டிரம்ப் நாம் விரும்பும் எதுவாக இருந்தாலும், உக்ரைனில் இருந்துஎடுத்துக்கொள்ளலாம் மேலும் அந்நாட்டுடனான ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் லாபம் 2022 முதல் அவர்களுக்கு வழங்கியமொத்த உதவியை விட அதிகமாக இருக்கும் என்றும் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.